Thursday, July 18, 2013

எண்ணிக்கையின்மை - அசணிதம் - INFINITE .தமிழில் உள்ள 36 (ஸ்)தானங்கள் !

மதுரை மாநிலத்தில் மறைப்பணி புரிந்த
இயேசு சபையச் சேர்ந்த
கொன்ஸ்டான்சியுச் ஜோசப் பெஸ்கி
 (வீரமாமுனிவர் )
இவர் இயற்றியதுதான் முதற்றமிழகராதி
அறிந்திட விரும்பும் ஆர்வலரை 
அன்புடன் வரவேற்கின்றது.

தமிழில் வரும் 36 (ஸ்)தானங்களின் விவரம் !

எண்ணிக்கை - அலகு, எண் கணக்கு, கணிதம்,கரணம்
 
எண்ணிக்கையின்மை - அசணிதம் - INFINITE

எண் வகுப்பு  -  ஒன்று முதல் முப்பத்தாறு (ஸ்)தானம் வருமாறு.

ஒன்று - ஏகம்

இரண்டு - உபயம், துவந்துவம், துவி, மிதுனம், யுகம், யுகளம், யுகுளி

மூன்று  -திரி

நான்கு  - சதுர்

ஐந்து  - பஞ்சம்

ஆறு   - சடு

ஏழு  - சத்தம்

எட்டு  -அட்டம்,

ஒன்பது  - ஒன்பான், தொண்டு, நவம்

 02  .தசம்  - பத்து ,

 03.  சதம் - நூறு

 04. சகத்திரம் - ஆயிரம்

 05. அயுதம் - பதினாயிரம்

 06. நியுதம்  - இலட்சம், நூறாயிரம்

 07. பிரயுதம் - பத்திலட்சம்

 08. கோடி - நூறிலட்சம்

 09. தசகோடி  - பத்துக் கோடி

 10. சதகோடி  - நூறுகோடி

 11. அர்ப்புதம்  - ஆயிரங்கோடி

 12. நியர்ப்புதம் - பதினாயிரம் கோடி

 13. கர்வம் - இலட்சங்கோடி

 14. மகாகர்வம் - பத்திலட்சங்கோடி

 15. பதுமம் - கோடாகோடி

 16. மக பதுமம் - பத்துக்கோடா கோடி

 17. சங்கம் - நூறு கோடாகோடி

 18. மகா சங்கம் - ஆயிரங்கோடாகோடி

 19. கோணி  - பதினாயிரங் கோடாகோடி

 20. மகா கோணி - இலட்சங் கோடாகோடி

21. கிதி - பத்துலட்சங் கோடாகோடி

22. மகாகிதி -  கோடி கோடாகோடி

23. கோபம்  - நூறு கோடி கோடாகோடி

24. மகா கோபம்  - நூறுகோடி கோடாகோடி

25. பரார்த்தம்  - ஆயிரங்கோடி கோடாகோடி

26. சாகரம் - பதினாயிரங்கோடி கோடாகோடி

27. பரதம் - இலட்சங்கோடி கோடாகோடி

28 ஆசிந்தியம்  - பத்திலட்சங்கோடி கோடா கோடி

29. அத்தியந்தம் - கோடி கோடி கோடாகோடி

30. அனந்தம் - பத்து கோடி கோடி கோடாகோடி

31. பூரி  -  நூறு கோடி கோடி கோடாகோடி

32. மகா பூரி - ஆயிரங்கோடி கோடி கோடாகோடி

33. அப்பிர மேயம் - பதினாயிரங்கோடி கோடி கோடானுகோடி

34. அதுலம் - இலட்சங்கோடி கோடி கோடாகோடி

35. அகம்மியம் - பத்திலட்சங்கோடி கோடி கோடாகோடி

36. அவ்வியத்தம்  - கோடி கோடி கோடாகோடி

ஆதாரம் :- வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதி

வெளியீடு :- சந்தியா பதிப்பகம், சென்னை, 600 083

தொலைபேசி :- 2489 6979 , 5585 5704


0 comments:

Post a Comment

Kindly post a comment.