Wednesday, July 17, 2013

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு - என்.எல்.சி. - மாநிலத்திற்குச் சமமான நிர்வாகம் !

ம.பொ.சி-யின் பேத்தி தொகுத்த ம.பொ.சி-யின்  தமிழன் குரல்  

ஈழத் தமிழர் குறித்து ஒரு எழுத்தாளர் எழுதிய கட்டுரையில், இலங்கை பற்றிய எல்லா முடிவுகளையும் சென்னை அரசாங்கத்தின் சம்மதத்துடன் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. இதுவே தமிழ் மண்ணில் ஏற்படுத்தப்படும் அரசு / பொதுத் துறைகள் குறித்த செயல்பாடுகளிலும் பின்பற்றப் படல்வேண்டும். அப்படிப் பின்பற்றப்பட்டிருந்தால் என்.எல்.சி.-யின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவினை மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்திருக்க முடியாது.
நிலத்தில் உள்ள கனிம வளம் உரிமையாளருக்கே சொந்தம்

நிலத்தடி கனிமவளம் அரசுக்குச் சொந்தமானது என்று கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக சில நில உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூன்று நீதிபதிகளின் அமர்வு இந்த முறையீட்டை விசாரித்தது. 1957- ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சுரங்கம், கனிமங்கள் மேம்பாடு சட்டத்தின் 425-ஆம் பிரிவின்படி, நிலத்தடி கனிம வளத்துக்கு நிலத்தின் சொந்தக்கார உரிமை கோர இயலாது என்று கூற இயலாது.

வரி விதிப்பு என்பது அரசின் இறையாண்மை வரம்பில் இருந்தபோதிலும் உடைமையாளர் என்ற ரீதியிலான உரிமையைக் கோர முஃடியாது. உடைமையாளர் உரிமை என்பது பல்வேறு உரிமைகளின் தொகுப்பு உரிமையாகும். நிலத்தடி கனிமத்துக்கான உரிமத் தொகையை அரசுக்கு அளிப்பது தொடர்பான விஷயங்களை 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிலங்களுக்கே இத்தகு உரிமை இருக்குமானால் நெய்வேலியின் நிலப்பகுதி தமிழகத்தில் உள்ளது. முற்றிலும் தமிழகத்தின் நிர்வாகத்திற்குட்பட்டுத்தான் இயங்கவேண்டும் என்று கருதவும் இடமுண்டல்லவா?

உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி நிலத்தடி கனிமத்துக்கான உரிமத்தொகையை வழங்கினால் மட்டும் போதுமே ?

இதுவரையான மொத்த மதிப்பீட்டையும் கொடுத்துவிட்டு, மாநில அரசே என்.எல்.சி.யை ஏன் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளக் கூடாது ? 

தமிழக முதல்வரின் சாணக்கிய தந்திரம் 


என்.எல்.சி. பொதுத்துறையின் [பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்தது. இதுவரை எந்த முதல்வரும் செய்யாத செயலை அதிரடியாக அரங்கேற்றம் செய்து, ரூ. 500 கோடிக்கு மத்திய அரசு என்.எல்.சி. பங்குளைத் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கும் செயலில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றுவிட்ட தமிழக முதல்வரை மனமாறப் பாராட்டுவோம்.              

பங்குச் சந்தையின் இரண்டு வார அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச விலையின் சராசரியை அடிபடையாக வைத்து விலை நிர்ணயம் செய்யவும், 6.44% பங்குகள் ஏற்கனவே பொது முதலீட்டில் உள்ளதால், 5% என்பதற்குப் பதிலாக 3.56% பங்குகளை தமிழக அரசு வாங்க செபி ஒப்புதல் அளித்துள்ளது.

“எனது தலைமையிலான அரசின் நடவடிக்கை மூலம் என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது எனது தலைமையிலான அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாகவும், எனது தனிப்பட்ட முயற்சிக்கும், தொழிலாளர்களின் போராட்டத்துக்கும், ,ஒற்றுமைக்கும், தமிழக மக்களின் ஒருமித்த குரலுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்” என்ற தமிழக முதல்வரின் அறிக்கை நியாயமானதுதானே ?                                   


தகவல் உதவி: தினமணி, 16, & 17ஜூலை 2013

 

0 comments:

Post a Comment

Kindly post a comment.