Wednesday, July 17, 2013

கோடிக்கண ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை எப்போது இயங்கத் துவங்கும் ?

இரண்டு முறை திறப்புவிழாக் கண்டும் செயல்படாத திருவொற்றியூர் எரிவாயு தகன மேடை. (இடது). 2 ஆண்டுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமரர் ஊர்தி
.

திருவொற்றியூர் நகராட்சி, புதர் மண்டிக்கிடந்த மயானத்தைச் சீர்படுடுத்தி, ரு.1.10 கொடி செலவில் அமரர் பூங்கா, இறுதிச் சடங்கு மண்டபம், தகன மேடை ஆகியவற்றுடன் நவீன மயானத்தைக் கட்டி முடித்தது. தகன மேடையை இயக்கும் பொறுப்பு திருவொற்றியூர் நகர சமூக சேவை மையத்திடம் அளிக்கப்பட்டது. சில நாட்கள் மட்டுமே இது செயல்பட்டது.

பழைய மயானத்தில் ( சுடுகாடு அல்லது இடுகாடு ) ஏற்கனவே  பணியாற்றிவந்த 11 பணியாளர்கள், தங்களை அரசு ஊழியர்களாக்கினால் மட்டுமே புதிய எரிவாயு தகன மேடையை இயக்க ஒத்துழைப்புக் கொடுப்போம் என எதிர்ப்புத் தெரிவித்து சேவை மைய நிர்வாக்களையும் விரட்டி அடித்தனர். பழைய எரிமேடையிலேயே விறகு, சாண விறட்டி போன்றவைகளைக் கொண்டு சடலங்களை எரித்து வந்தனர். ப்ரவும் த்ர்நாற்றம் அருகில் வாழும் மக்களை அவதிக்குள்ளாக்கியது. மேலும் ஒரு சடலத்தை எரிக்க 5 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை மயான ஊழியர்களால் வசூலிக்கப்பட்டது. இத்தகவல்கள் 21-09-2012 தினமணியில் விரிவாக வெளிவந்தது.

மேயர் சைதை துரைசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் கெ.குப்பன், மற்றும் அதிகாரிகள் தலய்யீட்டால் கடந்த ஆறு மாதங்களாக மயானத்தைச் சீரமைக்கும் பணியும், ஊழியர்களைச் சமாதானப் படுத்தி பணியில் ஈடுபடச் செய்யும் முஅற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

17-06-2013-இல் சென்னை மேயரால் இரண்டாவது முறையாகத் திறந்து வைக்கப்பட்டது. மேலும் சடலத்தை எரிக்கும் செலவையும் சென்னை மாநகராட்சியே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. திறப்பு விழா கண்டு ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் புதிய தகன மேடையில் இன்றளவும் ஒரு சடலம் கூட எரிக்கப்படவில்லை.

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மயானங்களில் பணியாற்றுவோர் எல்லாம் நிரந்தர ஊழியர்களாகவே உள்ளனர் என்பதும் பத்திரிகை செய்தி. அண்மையில் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நகரங்களுக்கும் அதே விதி முறையையைப் பின்பற்றிடத் தாமதம் ஏன் ?

சுடுகாட்டுக்குச் செல்லப் பாதை கேட்டுப் போராடும் நிலை கூட தமிழகத்தில் சில இடங்களில் நிலவுவதாகக் கேள்வி. நிலைமை இவ்வாறு இருக்க கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடையை விரைவில் பயன்பத்த ஆரம்பிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பம். 

உதவி:- தினமணி, 16-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.