Sunday, July 14, 2013

உலகின் மிகப் பெரிய கட்டடம் சீனாவில் திறப்பு - செயற்கைக் கடற்கரையும் உள்ளது!



உலகின் மிகப் பெரிய கட்டடம், சீனாவின், செங்டூ நகரில் திறக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையம், உலகின் மிகப் பெரிய கட்டடமாக, இதுவரை கருதப்பட்டது. 
 
தற்போது இதை, பின்னுக்கு தள்ளும் வகையில், சீனாவின் செங்டு நகரில், 19 லட்சம் சதுர அடியில், பிரமாண்டமான கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 
 
இந்த கட்டடத்துக்குள், இரண்டு, ஐந்து நட்சத்திர ஓட்டல்களும், 14 திரையரங்குகளும், ஒரு பல்கலைக் கழகமும், 5,000 சதுர மீட்டரில் செயற்கைக் கடலும் உள்ளன. 
 
இது மட்டுமல்லாமல், ஏராளமான கடைகளும் உள்ளன. இந்த கட்டடத்துக்குள் செல்ல, 16 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
 15 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த, வசதி செய்யப்பட்டுள்ளது. இக்கட்டடத்துக்குள், 244 லிப்டுகள் உள்ளன. இந்த வார துவக்கத்தில், இந்தக் கட்டடம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.


[Saturday, 2013-07-13 07:43:35]



http://www.seithy.com/breifNews.php?newsID=87381&category=WorldNews&language=tamil

0 comments:

Post a Comment

Kindly post a comment.