Sunday, July 14, 2013

5000 ஆண்டுகளுக்கு முந்திய எழுத்து வடிவம் சீனாவில் கண்டுபிடிப்பு !

 உலகின் மிகப் பழமையான எழுத்து வடிவங்கள் என்று கருதக்கூடிய ஒரு தொகுதி எழுத்து வடிவங்களை இரு கற்கோடாரிகளில் தொல்லியல் ஆய்வாளர்கள் சீனாவில் கண்டறிந்துள்ளனர். உடைந்த கோடாரி போன்ற பொருட்களில் காணப்பட்ட இந்த எழுத்து வடிவங்கள் குறைந்தது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மெசபத்தோமிய நாகரிக காலத்தில் கண்டெடுக்கப்பட்ட எழுத்து வடிவங்களும் கிட்டத்தட்ட இந்தக் காலப் பகுதியைச் சேர்ந்தவைதான்.அந்தக் கோடாரிகளில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் ஆரம்ப கால சீன மொழியாக இருக்கும் என்று ஒரு ஆய்வாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.  

ஆனால் இவை ஆதி மனிதர்கள் தமது எண்ணங்களை வெளிப்படுத்திய சித்திரத் தொகுப்புக்கள் என்று வேறு சிலர் கருதுகின்றனர். இந்த எழுத்து வடிவங்களின் பொருளை இதுவரை படித்தறிய முடியவில்லை. ஷாங்காய்க்குத் தெற்கே 2003 ஆம் ஆண்டுக்கும் 2006 க்கும் இடையே நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பல மதிப்பு மிக்க பொருட்களில் இந்தக் எழுத்து வடிவங்களைக் கொண்ட கோடரிகளும் அடக்கம். இதுவரை சீனாவில் கிடைத்த மிகப் பழமையான எழுத்துக்கள் விலங்குகளின் எலும்புகளில் காணப்பட்டுள்ளன. அவை 3,300 ஆண்டுகளுக்கு முந்தியவை.

[Thursday, 2013-07-11 20:11:49]

http://www.seithy.com/breifNews.php?newsID=87278&category=WorldNews

0 comments:

Post a Comment

Kindly post a comment.