Sunday, July 14, 2013

ஊர்த் தடையை மீறி செல்போன் பயன்படுத்திய பாக். பெண்மணி, கல்லால் அடித்துக் கொலை!



ஊர்த் தடையை மீறி செல்போன் வைத்திருந்ததிற்காக இரு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவரை பாகிஸ்தானில் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

பாகிஸ்தானில், தேரா காஜி கான் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆரிபா என்ற பெண் ஒருவர், ஊராருக்குத் தெரியாமல் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இது ஒருநாள் ஊராருக்குத் தெரிய வந்ததால், உடனடியாகப் பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. ஊர் விதிமுறைகளை மீறி செல்போன் பயன்படுத்தியதற்காக, இரு குழந்தைகளுக்குத் தாய் என்ற இரக்கம் கூடக் காட்டாமல், அவரைக் கல்லால் அடித்துக் கொல்ல உத்தரவிட்டனர் பஞ்சாயத்தார்.

அப்பெண்ணின் மாமா மற்றும் உறவினர்களாலேயே அத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. சமீபத்தில் இது சம்பந்தமாக அவரது உறவினர்கள் இருவர் டிவியில் கொடுத்த பேட்டியின் மூலம் இக்கொடூர தண்டனை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தீர்ப்பை வழங்கிய பஞ்சாயத்தார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=87417&category=WorldNews&language=tamilhttp://www.seithy.com/breifNews.php?newsID=87417&category=WorldNews&language=tamil

0 comments:

Post a Comment

Kindly post a comment.