Tuesday, July 30, 2013

மணல் குவாரி மோசடி : உ.பி. நடவடிக்கை எடுத்த பெண் ஐ.ஏ.எஸ் . அதிகாரி துர்கா சஸ்பெண்ட் ?


உத்தரப் பிரதேசத்தில் மணல் குவாரி மோசடியில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுத்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கோரியுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் கௌதம புத்தா நகர் மாவட்ட உதவி ஆட்சியராக துர்கா சக்தி நாக்பால் (28) பொறுப்பு வகித்து வந்தார். அவர் இந்த மாவட்டத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட குவாரி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்தார்.

இந்நிலையில், உரிய சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஒரு மசூதியின் சுற்றுச்சுவரை இடிக்க உத்தரவிட்டதாகக் கூறி அவரை முதல்வர் அகிலேஷ் யாதவ் சஸ்பெண்ட் செய்தார்.

 அரசின் இந்த நடவடிக்கைக்கு உத்தரப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் திங்கள்கிழமை மாநில தலைமைச் செயலாளர் அலோக் ரஞ்சனைச் சந்தித்து, துர்கா சக்தியின் சஸ்பெண்ட் உத்தரவை உடனடியாக ரத்து செய்து, அவரை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, பெங்களூர் சென்றுள்ள முதல்வர் அகிலேஷ் யாதவ் மாநிலம் திரும்பியதும் அவரிடம் இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்படும் என்று தலைமைச் செயலாளர் உறுதியளித்தார்                                                                         

நன்றி :-தினமணி, 30-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.