Tuesday, July 30, 2013

சிதம்பரத்தில் தன்னார்வத் தொண்டர்கள் ; குளங்களில் தூர்வாரும் பணி துவக்கம் !

ஓமக்குளத்தைத் தூர்வாரத் தொடங்க்கிய தன்னார்வத் தொண்டர்கள்

சிதம்பரத்தில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடராஜர் கோயில் தீர்த்தக் குளங்களில் ஒன்றான ஓமக்குளத்தை தூர் வாரும் பணியை இன்று தொடங்கினர்.

சிதம்பரம் நகரில் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு குறைந்து போனதால் நகரில் உள்ள நீர்வள ஆதாரமாக உள்ள 12 குளங்களை தூர் வார அனுமதி வழங்க வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் மாவட்ட ஆட்சியர், உதவிஆட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

அதனடிப்படையில் முதல் கட்டமாக சிதம்பரம் நகரில் அண்ணாகுளம், ஓமக்குளம், யானைக்குளம் ஆகிய 3 குளங்களை தூர் வாருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் வடக்குமெயின்ரோட்டில் உள்ள அண்ணாகுளத்தை தூர்வாரும் பணியை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பணியை மேற்கொண்டனர்.

இரண்டாவது குளமான ஓமக்குளம் தூர்வாரும் பணியை இன்று தொடங்கினர். இந்நிகழ்ச்சியில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் எம்.செங்குட்டுவன், ஆலோசகர் வி.சந்திரசேகரன், துணைத்தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், கமல்கிஷோர்ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.                                                   


நன்றி :-தினமணி, 30-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.