Thursday, July 18, 2013

மாணவியருக்குப் பிரசவ விடுமுறையை அனுமதித்துள்ள முதல் கேரளப் பல்கலைக் கழகம் !



கல்லூரியில் படிக்கும் திருமணமான மாணவியர்  பிரசவத்தின் காரணமாகக் கல்வித் தேர்வு ஆண்டுகளில் ( காலத்தில் ) ”ஓராண்டுகால” இழப்பு ஏற்பட்டு விடாமலிருக்க “மகபேறுகால” விடுப்பை, கள்ளிக்கோட்டை ( CALICUT ) பல்கலைக் கழகம் அனுமதிக்கும் அறிவிப்பினை சென்ற புதன் கிழமை
 ( 17-07-2013 ) அறிவித்துள்ளது.
 
இந்தியாவிலேயே இத்தகைய - இயற்கை தரும் தாய்மை எனும் அரியதொரு செயலால் பெண்கல்வி இடையின்றித் தொடரும் புரட்சிகரமான அறிவிப்பை  வெளியிட்ட முதற் பல்கலைக் கழகம்  என்ற பெருமையை  "CALICUT  UNIVERSIYYUNIVERSITY" பெற்றுள்ளது.
 
2010-இல் பதிவு செய்து  கல்லூரியில் தொடர்ந்து கல்வி பயின்று - மகப்பேறடைந்ததால் இடையில் நின்றுவிட்ட  MBA   மாணவியர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் இவ்வசதி BDS , MBBSமாணவியருக்கும் விரிவு படுத்தப்படுகின்றது. 

இரண்டாண்டுகால ஆய்வுகளுக்குப்பின் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் உதவி :- THE TIMES OF INDIA, 18-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.