Sunday, July 14, 2013

போஸ் ஆடியோ சிஸ்டத்தைக் கண்டுபிடித்த அமர் போஸ் காலமானார்.

போஸ் ஆடியோ சிஸ்டத்தை கண்டுபிடித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் அமர் ஜி போஸ் (83) அமெரிக்காவில் வேலேண்ட் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலமானார்.

1929, நவம்பர் 2-ஆம் தேதி பிலடெல்பியாவில் பிறந்தார் அமர் போஸ். அவரது தந்தையும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான நோனி கோபால் போஸ், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்.

வெள்ளையரை எதிர்த்துப் போராடிய கோபால் போஸ், 1920-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார். அங்கு பள்ளி ஆசிரியையை திருமணம் செய்தார்.

இந்த தம்பதிக்குப் பிறந்த அமர் போஸ், 13ஆவது வயதில் செலவுக்காக ரேடியோவைப் பழுதுபார்த்துப் பணம் சம்பாதித்தார்.

போஸ் நிறுவனத்தின் தலைவர் பாப் மரெஸ்கா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "போஸ் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தனது நிறுவனத்தை உருவாக்கினார். ஒருபோதும் மாறாத கொள்கையை அவர் கொண்டு நிறுவனத்தை வழிநடத்தினார். டாக்டர் அமர் போஸ் இறந்த தகவலை மிகவும் வருத்தத்துடன் வெளியிடுகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் சார்பில் வீடுகள், ஆடிட்டோரியம் மற்றும் ஆட்டோமொபைல்ஸýக்கு தேவையான நவீன ஒலிபெருக்கிகள் உருவாக்கப்பட்டன.

மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்திலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியுள்ளார் அமர்போஸ்.                                                                                           

நன்றி :-தினமணி, 14-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.