Saturday, July 6, 2013

காவிரிப் படுகை மீதேன் திட்டத்தைக் கைவிடலாம்: அமைச்சர் ஜெயந்தி !


காவிரி பாசனப் பகுதிகளில் நிலத்தடியிலிருந்து எரிவாயு, நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்று
விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்
.

தமிழகத்தின் காவிரிப் பாசனப் பகுதியில் நிலத்தடியிலிருந்து எரிவாயு மற்றும் நிலக்கரியை எடுக்கும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அந்தத் திட்டத்தை கைவிடுவதே சரி என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்

மத்திய அரசு கடந்த 2010 இல் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி எனும் நிறுவனத்துடன் மீதேன் எடுப்பது குறித்து புரிந்துணர்வு திட்டம் கையெழுத்திட பின்னர், கெயில் மற்றும் இண்டியன் ஆயில் நிறுவனங்கள் வாயுவினை திருச்சிக்கு எடுத்துச் செல்வதற்காக விளை நிலங்கள் வழியே குழாய்கள் பதிக்கத் துவங்கின.

அதனால் அப்பகுதிகளில் கடும் எதிர்ப்பு உருவாகியது. அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சிலர் அமைச்சர் ஜெயந்தி நடராஜனை சந்தித்து மீதேன் திட்டம் கைவிடப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.

இந்தத் திட்டத்தினால் டெல்டா பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரை மாணிக்கம் கூறினார்.

இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு தனது அமைச்சகம் அழுத்தம் கொடுக்கும் என்று அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறினார்.

அவ்வாறு கைவிடப்படவில்லையென்றால் போராட்டம் வலுக்கும் என்று விவசாயிகள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது                                                                


0 comments:

Post a Comment

Kindly post a comment.