Wednesday, July 31, 2013

பி.எஸ்.என்.எல் மொபைல் போன் இணைப்புகளுக்கு பேன்சி நம்பர்கள் ?

பி.எஸ்.என்.எல் மொபைல் போன் இணைப்புகளுக்கு பேன்சி நம்பர்கள் பெற ஆன்-லைன் மூலம் ஏலம் கோரலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பி.எஸ்.என்.எல் மொபைல் போன் இணைப்புகளுக்கு பேன்சி நம்பர்கள் பெற ஆன்-லைன் மூலம் ஏலம் கோரலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கான ஏலம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் தொடங்க உள்ளதாகவும் பி.எஸ்.என்.எல் (சென்னை வட்டம்) தெரிவித்துள்ளது.

இது குறித்து பி.எஸ்.என்.எல் வெளியிட்ட செய்தி:-

சென்னைக்குட்பட்ட பகுதிகளில் மொபைல் போன் இணைப்புகளுக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்கள், பழைய எண்களை மாற்றி பேன்சி நம்பர் பெற விரும்புவர்கள், ஆன்-லைன் மூலம் ஏலம் கோரலாம்.

www.chennai.bsnl.co.in என்ற இணையதள முகவரியில் உள்ள பேன்சி நம்பர்களில் விருப்பமானவற்றை தேர்வு செய்து ஏலம் கோர வேண்டும்.

விருப்பமான எண்களுக்கான ஏலத் தொகையைக் குறிப்பிட வேண்டும். அதிகத் தொகைக்கு ஏலம் கோரியுள்ளவருக்கு அந்த எண் வழங்கப்படும். பேன்சி நம்பர்களுக்கு 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஆன் - லைனில் ஏலம் கோரலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.

நன்றி :- தினமணி, 31-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.