Thursday, August 1, 2013

குடும்பநலம் : நீதிமன்றங்களில் 20 ஆயிரம் வழக்குகள் : 60% வெளிநாடு வாழ் இந்தியர் !

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் 20 ஆயிரம் வழக்குகள் வரை நிலுவையில் உள்ளன எனவும், இதில், 60 சதவீதம் வழக்குகள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வழக்குகள் எனவும் வழக்குரைஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் வழக்குகள் அதிகமாக நிலுவையில் இருப்பதற்கு அவர்களுக்கான சட்டங்கள் சரியான முறையில் இல்லை எனவும் வழக்குரைஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப நல வழக்குகளுக்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒரு முதன்மை குடும்ப நல முதன்மை மற்றும் கூடுதல் குடும்ப நல நீதிமன்றஙகள் உள்பட நான்கு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் இதுவரை 20 ஆயிரம் வழக்குகள் வரை நிலுவையில் இருப்பதாக வழகுரைஞர்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு மனுதாக்கல் செய்யும் மனுதாரர்கள் விவாகரத்து வேண்டும் என்ற மனநிலையோடு வருவதில்லை. மேலும், அவர்கள் தங்களுக்கென்று ஒரு வழக்குரைஞரை நியமிக்காமல் தாங்களாகவே தங்களது வழக்கை கையாள்வதும் வழக்கு நிலுவைக்கு முக்கிய காரணமாகும் என வழக்குரைஞர்கள் சார்பில் கூறப்படுகிறது.
இது தவிர, விவாகரத்து வேண்டும் என ஒரு ஆண் மனு தாக்கல் செய்தால் அவரது மனைவி பாரமரிப்பு செலவுக்கு பணம் வேண்டும் என்பன உள்பட பல்வேறு மனுக்கல் மேலும், மேலும் தாக்கல் செய்கிறார்கள்.

இதில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் வெளிநாட்டில் விவாகரத்து பெற்றால் அவர்களது விவாகரத்து இந்தியாவில் அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு விவாகரத்து பெற்று இங்கு மறுமணம் செய்தால் அவர்கள் மேல் வழக்கு தொடர முடியும் என்று சட்டத்தில் கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டில் பணிபுரியும் ஒருவர் மீது இங்கு வழக்கு போடப்படுகிறது என்றால் அவர் இங்கு வருவதற்கு தாமதமாகிறது. இது தவிர, அவர் வந்து போகும் செலவுகளை அதிகமாகிறது என்பதால் பலர் வழக்கு தொடர்பாக இந்தியாவிற்கே வருவதில்லை என்பதும் குடும்ப நல நீதிமன்றத்தில் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு முக்கிய காரமணாக வழக்குரைஞர்கள் தெரிவிகிக்கின்றனர்.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் ஏ.பழனியப்பன் கூறியது: குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவைக்கு மனுதார்கள் மிக முக்கிய காரணமாக இருக்கிறார்கள். ஆண் விவாகரத்து வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தால் அவரது மனைவி அவருக்கு விவாகரத்து கொடுப்பதில்லை. சுமூகமாக வழக்கை முடித்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதிலும் இருவரும் ஒற்றுமையாகப் போவதில்லை.

மேலும், இருவரும் விசாரணைக்கு சரியாக வருவதில்லை. வெளிநாட்டுக்கு செல்லும் மனுதாரர் தனக்கு பதிலாக தங்களது பெற்றோருக்கு அதிகாரம் கொடுத்துச் செல்கிறார்கள். ஆனால், மனுதாரர் இல்லாமல் வழக்கை விசாரிக்க முடியாது என்பதும் முக்கிய காரணம் ஆகும். இதனால், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வழக்குகள் அதிகமாக நிலுவையில் உள்ளது என்றார் அவர்.                                                                                                                                                 

நன்றி :- தினமணி, 01-08-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.