Tuesday, July 23, 2013

சென்னை ராஜீவ் அரசு மருத்துமனையில் பாதங்களைப் பரிசோதிக்கத் தனிப்பிரிவு !

 சர்க்கரை நோயாளிகளின் கால்களைப்
 பரிசோதிக்கும் பிரிவைத் தொடங்கி வைத்துப்
 பார்வையிடுகின்றனர் 
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி (இடது), 
சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கனகசபை.


சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவரின் கால்களில் காயம் ஏற்பட்டால் குணமாவது கடினம். இந்த காயங்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் கால்களையே வெட்டியெடுக்கும் நிலை உருவாகிவிடும். 

சர்க்கரை நோயாளிகளின் கால்கள் மற்றும் பாதங்களைப் பரிசோதனை செய்யும் பிரிவு  திங்கட்கிழமையன்று  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.

 இந்த மையம் குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கனகசபை கூறும்போது, சர்க்கரை நோயாளிகளுக்கு கண், இதயம், சிறுநீரகம், ரத்தக் குழாய்கள் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படலாம். 

ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படும்போது, கால்களில் உணர்ச்சி பாதிக்கப்படும். இதனால் காயம் ஏற்பட்டாலும் தெரியாது. இதனை கண்டறியாமல் விட்டுவிட்டால் கால்களை அகற்றவேண்டிய நிலை ஏற்படும்.
 
இப்போது ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவதை முன்கூட்டியே கண்டறிய தனிப்பிரிவு அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவின் முதல் மாடியில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான 2 பரிசோதனை கருவிகள் உள்ளன. 
 
இவற்றை தொண்டு நிறுவனம் ஒன்று அளித்துள்ளது. இந்த பிரிவு தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும் என்று தெரிவித்தார்.     

நன்றி :- தினமணி, 23-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.