Tuesday, July 16, 2013

டாக்கா :- 91 வயது இஸ்லாமியத் தலைவருக்கு 90 ஆண்டு சிறைத் தண்டனை !

வங்காளதேசத்தில் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த சுதந்திர போராட்டத்தின் போது பலர் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதில் தொடர்புடையவர்கள் மீது போர்க்குற்ற வழக்குகள் நடந்து வருகின்றன. அதற்காக டாக்காவில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் முன்னணி தலைவர்கள் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை அக்கட்சியைச் சேர்ந்த 4 தலைவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவரான குலாம் ஆசம் மீது கொலை, துன்புறுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஓராண்டாக நடந்து வந்த விசாரணையின் முடிவில், குலாம் ஆசம் மீதான 61 குற்றங்களும் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவரை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி, அவருக்கு 90 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 நன்றி:-maalai malar, 15-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.