Monday, July 15, 2013

சத்தான உணவு தயாரிக்கும் போட்டியில் 5 இந்தியச் சிறுவர்கள் வெற்றி

சத்துணவு தயாரித்த சிறுவர்களுக்கு ஒபாமா மனைவி விருந்து!
[Thursday, 2013-07-11 19:06:28]

 அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி, வெள்ளை மாளிகையில் அளித்த விருந்தில், இந்திய வம்சாவளி சிறுவர்கள், ஆறு பேர் பங்கேற்றனர். குழந்தை பருவததில் ஏற்படும், உடல் பருமன் பிரச்னைக்கு தீர்வு காணும் இயக்கத்தை, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி, மிச்சேல் நடத்தி வருகிறார். இந்த இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு விழாவையொட்டி, உடல் பருமனைக் குறைக்கும், சத்தான உணவு தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டது. கடந்த வாரம் நடந்த, இந்தப் போட்டியில் அமெரிக்கா முழுவதும், 13 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற, 54 சிறுவர்கள், வெள்ளை மாளிகையில், நேற்று முன்தினம் நடந்த விருந்துக்கு அழைக்கப்பட்டனர்.  

இதில், ஆறு பேர், இந்திய வம்சாவளியினர். விருந்திலும் அவர்கள், தங்கள் திறமையைக் காட்டினர். இதில், ஒரு சில உணவுகளை அதிபர் ஒபாமா சுவைத்துப் பார்த்து பாராட்டினார். அப்போது அவர் குறிப்பிடுகையில், எனக்கு அவ்வளவாக சமைக்கத் தெரியாது. சமைப்பதற்கு நேரமும் கிடையாது. சமைப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும் போது, உங்கள் சமையல் குறிப்புகளை பயன்படுத்துகிறேன் என்றார்.

இந்த விருந்தில் பங்கேற்று, சத்தான உணவுகளைச் சமர்ப்பித்த, மூன்று சிறுவர்களின் உணவுகளை விளம்பரதாரர்கள் படம் எடுத்தனர். 
 
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 10 வயது பெண் எம்மா சிசில்சோவின், சிக்கன் மசாலாவும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பஞ்சாபில் உள்ள பாட்டியிடமிருந்து பெற்ற சமையல் குறிப்புகளை கொண்டு, எம்மா இந்த சமையலை செய்துள்ளாள். இந்த சிக்கன் மசாலா குறிப்பை, அமெரிக்க சமையல் நிறுவனங்கள் பயன்படுத்த உள்ளனர்.

சத்துணவு தயாரித்த சிறுவர்களுக்கு ஒபாமா மனைவி விருந்து!
[Thursday, 2013-07-11 19:06:28]
 

இந்தியவம்சாவளியினர்                                                                                                                 
மசாசூசட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஷெபாலிசிங் ,12 வயது 
 
வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த விஜய் டே,  12 வயது 
 
ஓஹையோ  மாகாணத்தச் சேர்ந்த அனிஷ படேல், 11 வயது,
 
பென்சில்வேனியா மாகாணத்தச் சேர்ந்த கணேஷ் செல்வகுமார், 9 வயது
 
டெக்ஸாஸ் மாகாணத்தச் சேர்ந்த தேவன்ஜி உதேஷி                                                    
 
05-07-2013 தினமணி தரும் தகவல் இது.                                             

                                                                                                               

 
/

0 comments:

Post a Comment

Kindly post a comment.