Saturday, June 15, 2013

செங்கிஸ்கான் - லயன் எம்.சீனிவாசன்

இந்நூலைப் புரட்டிப் பார்த்தாலே படிக்கத் தூண்டும். படித்து முடித்தவர்கள் பிரருக்குத் தராமல் பாதுகாக்கும் முடிவுக்கும் வருவார்கள்.

அன்றாடங் காய்ச்சியாக வறுமையிலும் வாழ்க்கையிலும் சோகத்துடன் இளமைக் காலத்தில் வாழ்ந்த டெமுமூன், உலகத்தில் பெருமளவு நாடுகளை ஆட்சி புரிந்ததைக் காட்சிகளாக விளக்குகிறது இந்நூல். அந்த டெமுமூந்தான், பிற்காலத்தில் செங்கிச்கான் என்று அழைக்கப்பட்டவர். இந்நூலில் மங்கோலியர்கள் வாழ்க்கை முறைகளையும் கலாசாரத்தையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

செங்கிஸ்கானின் ஆளுமைத் திறன், நட்பு, தியாகம், தலைமைப் பண்பு, உற்ற தோழனே அவருக்கு எதிரானது, கடும் போர், யுத்தம், போர் வழி முறைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாட்டைக் கைப்பற்றும்போது கிடைத்தவற்றை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்ததில் செங்கிஸ்கானின் ஈகையையும், தன்னை நம்பியவர்களை அருகில் வைத்துக் கொண்டதில் விசுவாசத்தையும், உலகின் பெரும் பகுதியை ஆண்ட போதிலும் காட்சிக்கு எளியவனாய் இருந்ததையும் பார்க்கும்போது ஏழைப்பங்காளனாய் இருந்ததையும் உணர முடிகிறது.

அரசியல், வரலாறு போன்றவற்றில் ஆஎவம் உள்ளவர்கள் படித்து, பாதுகாக்க வேண்டிய நூல் இது.

நன்றி :- தினமலர், 19-12-2011 
 
உதவி:- அலமாரி மலர் 1 இதழ் 6 ஜூன் 2013
 
தொடர்புக்கு : 95000 45611 

0 comments:

Post a Comment

Kindly post a comment.