Sunday, June 16, 2013

மும்பை ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம்மில்,, கிரேக்கத்திலிருந்து ரூ13 லட்சம் கையாடல் !


ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் 29 பேரின் கணக்குகளில் தில்லுமுல்லு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்டப்டுள்ளது. இவற்றில் 12 வங்கிக் கணக்குகள் மும்பை போலீஸாருடையதாகும்.

இந்த வங்கிக் கணக்குகளிலிருந்து கடந்த இரண்டு மாதங்களில் ரூ. 13 லட்சம் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை கிரேக்கத்தில் உள்ள ஏடிஎம்-மிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மும்பை போலீஸாரின் செல்போனுக்கு, அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து ஏடிஎம் மூலம் பணம் எடுக்கப்பட்டது தொடர்பான குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வந்துள்ளது. இந்தத் தொகைகள் அனைத்தும் யூரோ மதிப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து உடனடியாக தெரிந்துகொள்ள அவர்கள் அருகிலுள்ள ஏடிஎம் மையங்களுக்குச் சென்று தங்கள் வங்கிக் கணக்கு தொடர்பான விவர அறிக்கையை (மினி ஸ்டேட்மென்ட்) எடுத்துப் பார்த்தபோது, யூரோ மதிப்பில் பணம் எடுக்கப்பட்ட விவரம் தெரியவந்ததது.

இந்த வங்கிக் கணக்குகள் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலம் ஏப்ரல், மே மாதங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 29 வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 13 லட்சம் தொகை கையாடல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

நன்றி :- தினமணி, 15-06-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.