Saturday, April 20, 2013

சுவாமி சகஜாநந்தாவுக்கு மணிமண்டபம்-சிலை: மார்க்சிஸ்ட் கோரிக்கை !




சுவாமி சகஜானந்தா குறித்த தகவல்களுக்கு

சுவாமி சகஜாநந்தா (1890- 1959) - ரவிக்குமார்-

இன் பின்வரும் வலைப்பூ செல்க!


http://nirappirikai.blogspot.in/2010/10/1890-1959.html


நந்தனார் கல்வி நிலையங்களை உருவாக்கிய தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சுவாமி சகஜாநந்தாவுக்கு மணிமண்டபம் மற்றும் முழு உருவச் சிலையை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுதொடர்பாக துணைக் கேள்வியை எழுப்பினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன் (சிதம்பரம்). அப்போது, அவர் பேசுகையில், 30 ஆண்டுகளாக சட்டப் பேரவையில் உறுப்பினராகவும், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் நந்தனார் கல்வி நிலையங்களை உருவாக்கிய பெருமையையும் பெற்றவர், சுவாமி சகஜாநந்தா.

பல துறைகளில் எண்ணற்ற சாதனைகளைச் செய்த அவர், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவர் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் கருதுகிறார்கள். எனவே, சிறப்பான சாதனைகளைப் புரிந்த சுவாமி சகஜாநந்தாவுக்கு, சிதம்பரத்தில் மணிமண்டபமும், சென்னையில் முழு உருவச் சிலையையும் அமைத்திட அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை                                                                                                                                     

நன்றி :- தினமணி, 20-04-2013


0 comments:

Post a Comment

Kindly post a comment.