Friday, April 26, 2013

’நுண்கலைகளைப் பாதுகாக்க ரூ.1 கோடி ! -வைகைச்செல்வன் அறிவிப்பு !



நுண்கலைகளைப் பாதுகாத்து வளர்க்கும் வகையில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார்.

கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் வைகைச்செல்வன் வெளியிட்ட அறிவிப்புகள்:

நுண் கலைகளையும், நிகழ்த்துக் கலைகளையும் பாதுகாத்து வளர்ப்பதற்கு கலை பண்பாட்டுத் துறை சார்பாகவும், பிற அரசு துறைகள், தனியார் அமைப்புகளுடன் இணைந்து தமிழகம் முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூ.1 கோடி ஒதுக்கப்படும்.

சென்னை, மதுரை,கோவை அரசு இசைக் கல்லூரிகளில் சான்றிதழ் படிப்பு, பட்டய படிப்புகளோடு கூடுதலாகத் தேவைப்படும் கலைப் பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்பு ரூ.3.01 கோடியில் தொடங்கப்படும்.சென்னை, மதுரை, கோவை,திருவையாறு அரசு இசைக் கல்லூரிகளில் ரூ.1 கோடியில் தொழிற்கூடம், உணவுக் கூடம் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படும்.        

நன்றி :- தினமணி, 26-04-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.