Monday, March 18, 2013

ஆஹா ! அழகு !



தர்பூசணி: இப்பழத்தில் வைட்டமின் "ஏ', "பி', "சி' நிறைந்த அளவில் இருக்கிறது. தர்பூசணி சருமம் பொலிவு இழப்பதை அகற்றும்.

பால்: சருமத்தைச் சுத்தம் செய்து புதிய செல்கள் வேகமாக உருவாக உதவும்.

மஞ்சள்: மஞ்சளில் மருத்துவப் பண்புகள் நிறைய உண்டு. சருமக் குறைகளை நீக்கி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

தக்காளி: இறந்த செல்களை அகற்றி மேனியைப் பளபளப்பாக்கும்.

கோதுமை மாவு: இரும்புச்சத்து நிறைந்த கடலைமாவு போலவே பயன்படும். உடலின் அழுக்குகளை அகற்ற உதவும்.

பாதாம்: எண்ணெய் நிறைந்த பாதாம் ஈரப்பதத்தைச் சருமத்துக்கு மீட்டுத் தரும்.

வெள்ளரி: உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கும். உலர்ந்த சருமத்தை இதமாக்கும். வெள்ளரிக் கூழைப் பூசிக் கழுவி வர முகம் பளிச்சிடும். கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மறைய கண் மேல் வைக்கலாம்.

பப்பாளி: சரும செல்களைப் புதுப்பிக்க, கருமையைக் குறைக்க உதவும்.

மாம்பழம்: மேனி முதுமை அடைவதைத் தடுக்கும்.

தேன்: சருமத்தைப் பொலிவாக்குகிறது.

வாழைப்பழம்: இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம் போன்ற ஏராளமான ஊட்டப் பொருள்கள் உள்ளன. வாழைப்பழத்தைச் சருமத்தில் பூசி வர சருமம், மென்மை அடைந்து இளமையும், ஆரோக்கியமும் பெறும்.    

எலுமிச்சை: நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் எலுமிச்சைக்கு உண்டு. பொடுகு தொல்லைக்குத் தீர்வாகும். சருமத்தை இறுக்கம் அடையச் செய்யும்.                    

நன்றி :-  கீதா ஹரிதரன், கொச்சி, ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 18-03-2013 

மேற்குறிப்பிட்டவை அந்தந்தப் பொருட்களின் பொதுவான 

குணங்களாகும். அவரவரிடம் இருக்கும் நோயின் தன்மைக்கேற்ப 

சிலவற்றைத் தவிர்க்கவேண்டியதிருக்கும். எந்த நோயும் இல்லாதவர்கள்

இவற்றை அப்படியே பயன்படுத்தி, இயற்கையோடு இணைந்த நல்வாழ்வு

நடத்தி மகிழலாம்.


       

0 comments:

Post a Comment

Kindly post a comment.