Saturday, March 30, 2013

சிவலிங்கம் இருப்பது எவ்விடத்தில் ? திருமாலும் நான்முகனும் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை ?

சிவலிங்கத்தின் உள்ளுறை:

சிவலிங்கத்தின் ஆவுடையார் அருள் வட்டத்தைக் குறித்தது. அந்த அருளால் ஆன அண்ட வடிவங்களைக் குறித்தது. அதன்மேல் எழும் இலிங்கம் அருள் அண்டத்தின் மேல் ஊடுருவி எழுகின்ற பெருஞ்சோதியைக் குறித்தது. இதைத்தான் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி” என்று பாடினார் மணிவாசகர்.

இந்த அண்டங்கள் எல்லாம் சக்தியின் வடிவாதலால் அதனை (UNIVERSE IS IN THE FORM OF ENERGY) ஆவுடையார் என்ற வட்ட வடிவில் அமைத்தார்கள். சத்தி உயிர்களை நோக்கியது. ஆதலால் ஆவுடையாரின் முனையை கீழ்நோக்கி அமைத்தார்கள். மேலெழும் பரஞ்சோதியிலிருந்து சத்தி பிரிந்து உயிர்களை நோக்கி வந்து அறிவூட்டுவதாக இலிங்கத்தையும் ஆவுடையாரையும் பொருத்தினார்கள்.
  

(சிவனியமும் சால்பியமும் புத்தகத்தில் இருந்து எடுத்தது)  

http://arundhtamil.blogspot.in/2012/08/94.html  ( இவர் வேறு )


சிவலிங்கம் நமக்குள்ளே

உள்ளம் இருப்பது உள்ளம் உள்ளது என்று சொல்லப்படுகின்ற உண்மையாக இருப்பதும் உள்ளம் ஒன்றுதான். அதுதான் உண்மையான பெருங்கோயில் கருவறை.

உடம்பு ஆலயம்.

உள்ளிருக்கும் தெய்வம் வள்ளல்.
ஆலயத்துக்குக் கோபுரம் வாய். வாயால் போற்றிக்கொண்டுதான் உள்ளக் கோயிலுக்குள் நுழைய வேண்டும். பழகிப்போன வாய் பாடுவதை மனம் எண்ணிப் பார்க்கும்.

ஒவ்வொருவருக்கும் உயிர்தான் சிவலிங்கம். இந்த உண்மை தெள்ளத் தெளிவாய் எண்ணிப் பார்த்தால் புலனாகும்.

இதனைப் புலப்படச் செய்வது மணி விளக்கு. சுடர் விளக்குக்கு நடுவில் இருள் இருக்கும். மாணிக்க விளக்குக்கு நடுவில் இருள் இல்லை. ( காள் - இருள் ) நம்மிடம் 5 மாணிக்க விளக்குகள் உள்ளன. அவற்றை மூடியிருக்கும் அழுக்கைத் துடைத்தால் அவை தாமே ஒளிறும். அந்த வெளிச்சத்தில் நம் உயிராக இருக்கும் சிவலின்ஹ்கத்தைக் கண்டு வழிபடலாம்.

சிவன் இருக்குமிடம்.

தேவன் சிவபெருமானைத் தேடினேன். கடைசியாக இப்போது கண்டு கொண்டேன். திருமாலும் நான்முகனும் தேடினார்கள். ஆனால் அவர்களால் காண முடியவில்லை. நான் கண்டு கொண்டேன். அவன் எனக்குள்தான் இருக்கிறான். திருமாலுக்குள்ளும் பிரமனுக்குள்ளும் சிவன் இருக்கிறான். அவன் இருக்கும் இடத்தை விட்டு விட்டு இல்லாத இடத்தில் அவர்களைத் தேடினார்கள். எனவே, அவர்களால், அவனைக் காண முடியவில்லை.

சிவலிங்கத் திருக்கோயில் 

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தவர் க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கம்


திருமூலர் - திருமந்திரம் 1823       ( 11. சிவ பூசை )

-------------------------------------------------------------------------------------------------------------

என்னுள்ளே தேவன்                       

                 தேடிக் கண்டுகொண்டேன் - திரு
                                    மாலொடு நான்முகனும்
                 தேடித் தேடொனாத் தேவனை என்னுள்ளே
                 தேடிக் கண்டுகொண்டேன்.

திருஅங்கமாலை
அப்பர் தேவாரம்

பொதுவன் அடிகள் விளக்கம் 
புத்தகம் 
புதிய அகம் 
புது மனை புகுவிழா.
19-05-2010
போரூர்
சென்னை-600 110

----------------------------------------------------------------------------------------------------------------






0 comments:

Post a Comment

Kindly post a comment.