Saturday, March 30, 2013

வாலியும் தமிழ் மன்னனே ! - பண்டிதர் இ.மு.சு.


இராவணனைப் போலவே வாலியும் தமிழ் மன்னனேயாவான். இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுந்த தென்காசி தலபுராணம், வாலியைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறது.

“ வாலி என்ற பெயரைக் கொண்டு வாலை உடையவன் என்று கூறுவது பொருந்தாது. வாலி என்ற பெயரையுடைய பலராமனுக்கு வால் இருந்ததுண்டா ? வால் என்பது அறிவு. அதை உடையவன் வாலி. வட ஆரியர் நூலை ஆதாரமாகக் கொண்டு வாலிக்குக் கோயிலில் வால் வைத்திருப்பது அறிவீனம்.

“வாலிஎன்றபேர் வால்முளைப்பித்தவின் மயங்கின்
வாலிப்பெர்ப்பல ராமற்கேன் வாலை வைத்திலை எண்
வாலி என்ன வால் நினைவெழின் வாலறிவிறைக்கும்
வாலிருப்பதாய் எண்ணும் அப்பேய் மாற்றுதிர் வல்வீர்”

“வடவர் நூலை ஆசாக்கொடு கோயிலில் வால்வைத்
திடாமைத் திகழ் வாலியின் புகழ்பெரிது”


இதிகாசங்களின் தன்மைகள் என்ற நூலில் பண்டிதர் இ.மு.சு.

 ( நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர் ) எழுதியது.
 
பெரியார் சுயமரியாதைப் பிரசார வெளியீடு, 600 007.  


http://arignargal.blogspot.in/2012_02_01_archive.html
 

Tuesday, February 28, 2012
புலவர் இ.மு.சுப்பிரமணியம் ~
அறிவோம் அறிஞர்களை!
பதிவு செய்த நாள் : 28/02/2012
94. செய்தித் தமிழ்மாலை சிந்தனை நற்பேழை புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை (1896-1975).

94. இரண்டாயிரத்து நூற்று ஐந்து அடிகளைக் கொண்ட “இராமாயண அகவல்” படைத்த இப்பேரறிஞர் பள்ளிப் பிள்ளைகளுக்கென எழுதிக் குவித்த பாட நூல்கள் பலப்பல.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

0 comments:

Post a Comment

Kindly post a comment.