Sunday, March 31, 2013

இடிந்தகரையில் கடல் அரிப்பு: 100 ஆண்டு பழமையான ஆலயம் இடிந்தது !


இடிந்தகரை கடற்கரையில் கடல் அரிப்பால் இடிந்து விழுந்த 100 ஆண்டு பழமையான ஆரோக்கியநாதர் ஆலயம்.

திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையில் ஏற்பட்ட தொடர் கடல் அரிப்பால் 100 ஆண்டு பழமையான சிற்றாலயம் சனிக்கிழமை இடிந்து கடலுக்குள் விழுந்தது.

இடிந்தகரை கிராமத்தில் உள்ள கடற்கரையில் புனித ஆரோக்கியநாதர் சிற்றாலயம் இருந்தது. இந்த ஆலயத்தில் பொதுமக்கள் நாள்தோறும் சென்று வழிபட்டு வந்தனர். ஆலயம் இருந்த பகுதியில் தொடர்ச்சியாக கடல் அரிப்பு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆலயத்தில் இருந்து புனித ஆரோக்கியநாதர் சொரூபம் அங்கிருந்தது கொண்டு செல்லப்பட்டுப் பிரதான தேவாலயத்தில் வைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஒரு மாதமாகப் பொதுமக்கள் சிற்றாலயத்துக்குச் செல்லவில்லை.

இதற்கிடையே கடல் அரிப்பு அதிகமானதால் சிற்றாலயம் இடிந்து கடலுக்குள் விழுந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் பார்த்துச் சென்றனர்.     

நன்றி ள்- தினமணி, 31-03-2013                  



0 comments:

Post a Comment

Kindly post a comment.