Thursday, March 7, 2013

ஆங்கில விழிப்புணர்விற்கு ஓர் ஆங்கில அம்மன் கோவில் !


சந்திர பன் பிரசாத்  ( CHANDRA BHAN PTASAD ) ஓர் தலித் அறிஞர்; சிந்தனைவாதி. அவர் ஊருக்கு ஓர் ஆங்கிலேயர் வந்திருந்தபோது, அவர் தொடுத்த வினாக்களுக்கு, முதுகலைப் பட்டம் வாங்கிய அவராலேயே உரிய முறையில் பதிலளிக்க இயலாமற் போனது குறித்து வருந்தினார்.

தமது மனைவி நிஷா பால் ஜௌஹார் ( NISHA PAUL JAUHAR ), அவர்களுடன் கலந்தாலோசித்த்தார். அவரது மனைவி  நடத்தும் நாளந்தா பப்ளிக் ஷிக்‌ஷா நிகேதன் இன்டர் காலேஜ்  ( NALANDA PUBLIC SHIKSHA NIKETAN INTER COLLRGE )வளாகத்திற்குள் ஆங்கில அம்மன் ( ENGLISH DEVI ) கோவில் உருவாக்கப்பட்டது.

 மத உணர்வுகளோடு இணைத்து ஊட்டப்படும் கருத்துக்கள் ஆழமாக  தலித்துக்கள் மத்தியில் வேரூன்றும்  என கணவனும் மனைவியும்  தீர்மானத்திற்கு வந்ததன் பிரதிபலிப்பே இந்தக் கோவில். தலித்துக்களிடையே ஆங்கிலம் கற்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி விழிப்புணர்வை ஊட்டும் என்பது அவர்களது  நம்பிக்கை.



இந்த ஆங்கில அம்மன் கோவிலைத் திறந்து வைத்தவர், காங்கிரஸ் தலைவர், திக் விஜய் சிங். திறக்கப்பட்ட நாள் அக்டோபர்,25, 2010. அக்டோபர் 25-ஐத் தேர்ந்தெடுக்க முக்கியமான காரணம், அன்றுதான் அடிமைப்பட்ட இந்தியாவிற்கு குமாஸ்தாக்களை மட்டுமே உருவாக்கும் நோக்கில் கல்விக்கொள்கையை உருவாக்கிய மெகாலேயின் ( MACAULAY )  பிறந்த நாள் . மேலும்  அக்டோபர் 25, ”ஆங்கில நாள்” ஆகக் கொண்டாடப்பட்டும் வருகின்றது. இவ்வளவும் நடப்பது உத்தரப் பிரதேசத்தில் உள்ள பானிகா ( BANIKA ) கிராமத்தில் ! 




இந்தத் தகவலுக்கு அடித்தளம் அமைத்துத் தந்து, தேடலுக்குத் 

தூண்டுகோலாய்த் திகழ்ந்தது,

கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள, ஆங்கில மாயை என்னும் நூல். 

நூலாக்கம் :- நலங்கிள்ளி   enalankilli@gmail.com

www.vijayapathippagam  coimbarote- 641 001 Rs.80/-





0 comments:

Post a Comment

Kindly post a comment.