Wednesday, March 6, 2013

ஐன்ஸ்டீனைவிட அதிக நுண்ணறிவுத் திறன் கொண்ட இந்திய வம்சாவளி மாணவி, இலண்டனில் !

விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீனைவிட அதிக நுண்ணறிவுத் திறன் (ஐ.க்யூ) உள்ளவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி நேகா ராமு (12) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இப்போது பெற்றோருடன் பிரிட்டனில் வசித்து வரும் இந்த சிறுமி அந்நாட்டின் புகழ்பெற்ற பிரிட்டிஷ் மென்ஸô அமைப்பு நடத்திய நுண்ணறிவுத் திறன் தேர்வில் பங்கேற்றார். இதில் அவர் 162 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஏனெனில் விஞ்ஞானி ஐன்ஸ்டீன், இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் நுண்ணறிவுத் திறன் 160 என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் தம்பதியின் மகளான நேகா தனது 7-வது வயதில் பெற்றோருடன் பிரிட்டனுக்குச் சென்றுவிட்டார். அங்கு பள்ளி நுழைவுத் தேர்வில் 280/280 மதிப்பெண்கள் பெற்றபோது அனைவரது கவனமும் அவர் பக்கம் திரும்பியது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 18 வயது மாணவர்களுக்கான தேர்வில் பங்கேற்ற நேகா அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்றார்.

இப்போது தனது நுண்ணறிவுத் திறனை நிரூபித்துள்ளார். இத்தேர்வு குறித்து கருத்துத் தெரிவித்த நேகா, "இது மிகவும் கடினமாகவே இருந்தது. எனினும் தேர்வில் சாதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பெற்றோரைப் போல டாக்டராக விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

தனது மகளின் சாதனை குறித்துப் பேசிய நேகாவின் தாய் ஜெயஸ்ரீ, "எனது மகளால் மிகவும் பெருமையடைந்துள்ளோம். பொதுவாக அனைத்துத் தேர்வுகளிலும் சிறப்பான மதிப்பெண்கள் பெறுவது வழக்கம். ஆனால் இந்த அளவுக்கு நுண்ணறிவுத் திறன் இருப்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது' என்றார்.        

நன்றி :- தினமணி, 06-03-2013                                                                                         

0 comments:

Post a Comment

Kindly post a comment.