Monday, March 25, 2013

’சத்யமேவ ஜயதே’ - முண்டக உபநிடதம் என்ன சொல்கிறது ? சமஸ்கிருதம் தெரிந்தோர் விளக்கம் சொல்வீர் ! !




செம்மொழித் தமிழுக்கு முண்டக உபநிடதம்தான் முகவரி தர வேண்டுமா என்பது முதல் வினா ?

”சத்யமேவ ஜய” என்றால் “வாய்மையே வெல்லும் “ என்பது சரியான பொருள்தானா? என்பது அடுத்த வினா ?

”சத்யமேவ ஜயதே ந அன்ரிதம்”  
( முண்டக உபநிடதம் 3.6.1. பக்கம் / இராமகிருட்டின மடம் வெளியீடு )

satyameva jayate nānṛtaṁ
satyena panthā vitato devayānaḥ |
yenākramantyṛṣayo hyāptakāmā
yatra tat satyasya paramaṁ nidhānam ||[3]

 ( விக்கிபீடியாவிலிருந்து )

என்ற முழு வரிக்கும் வாய்மையை ஒழுங்கற்ற வழிகளில் வெல்ல முடியாது என்பதே பொருள். அதாவது “சத்யமேவ - ந - ஜதே - அன்ரிதம் - என்பதே பொருள் கொள்ளும் முறை. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் நான்கு வரிகளைக் கொண்ட அந்தப் பாடலில் பரமம் - நிதானம் - சத்யம் - அதாவது மேலானதை, அமைதியானதை, வாய்மையை ஒழுங்கற்ற வழிகளில் வெல்ல முடியாது என்பதே அதன் முழுச் செய்தி.

”சத்ய மேவ ஜயதே” என்பதை “ வாய்மையே வெல்லும்” என்னும் பொருள்படும்படி, வடமொழி இலக்கணப்படி எழுத வேண்டுமானால், “சத்யைவ ஜயதே” என்றுதான் எழுத வேண்டும்,

மாறாக ”சத்ய அம் ஏவ ஜயதெ” என்று எழுதிப் பொருள் கொள்ள வேண்டுமாயின் “ வாய்மையை மட்டுமே வெல்லுகிறது” என்பதே பொருள் ஆகிறது வாய்மையை எது வெல்கிறது என்பதே நமது இன்றையக் கேள்வி ?

வினா எழுப்புபவர் :-

 ”வெளிக்கரு”  ஆசிரியர்
பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்


வெளியீடு :-
மாநாகன் பதிப்பகம்
எண் 1/ 70 வடக்கு நான்காவது தெரு,
கல்லல், சிவகங்கை மாவட்டம். 


ஆண்டு 2009 ஏப்ரல், விலை ரூ350/-

ஆசிரியரைப் பற்றிய சிறு அறிமுகம்:-

1975-ல்  சென்னை வள்ளுவர் கோட்டம் நிறைவுப் பணி வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது,  மாமல்லபுரம் சிற்பக்லலைப் பயிற்சி மையத்தில் மாணாக்கரனாவர். எட்டாண்டுகள் தொடர்ந்த பயிற்சிக்குப்பின், கோயில் கட்டடக் கலைப் பட்டப் படிப்பில் முதல் மாணாக்கனாகத் தேறி தங்கம் வென்றார். வழங்கியவர், அப்போதைய கல்வி அமைச்சர் அரங்கநாயகம்.

செருமன்நாட்டுப் பேராசிரியர் இயான்தனம் ( JOHN DUNHAM )  இவரது 21-வது வயதில் ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகத்துக்கு அழைத்துச் சென்றார்.

“அவன் எ4ன் சொத்து, திருப்பிக் கொடுத்துவிடு; இந்த நிறுவனத்தையே அவனுக்காகத்தான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன்”  எனக் கேட்டுக் கல்லூரியின் தலைமை 60 நாட்களில் திரும்ப வரவழைத்து இணை விரிவுரையாளராகப் பணியமர்த்திக் கொண்டது.

எஞ்சியவற்றை நூலில் காண்க.                                             

 ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் “

0 comments:

Post a Comment

Kindly post a comment.