Saturday, March 23, 2013

பாரதமாதாவுக்கு குட்பை சொல்லத் துடிக்கும் இந்தியர்கள் !

பாரதமாதாவுக்கு குட்பை சொல்லிவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகத் துடிக்கும் 1 கோடி இந்தியர்கள் !

வாஷிங்டன்: 1 கோடி இந்தியர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற விரும்புகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று நாம் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பல இந்தியர்கள் அமெரிக்காவில் செட்டிலாகத் தான் விரும்புகிறார்கள்.

கேலப் என்ற நிறுவனம் 154 நாடுகளில் வசிப்போரிடம் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அதில் 138 மில்லியன் பேர் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 42 மில்லியன் பேர் இங்கிலாந்திலும், 37 மில்லியன் பேர் கனடாவிலும், 10 மில்லியன் பேர் பிரான்ஸிலும் குடியேற விரும்புகின்றனர்.

அமெரிக்காவில் செட்டிலாகத் துடிக்கும் சீனர்கள் !


 அமெரிக்காவில் செட்டிலாகத் துடிக்கும் சீனர்கள் உலக நாடுகளிலேயே அதிக பட்சமாக 19 மில்லியன் சீனர்கள் அமெரிக்காவில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். சீனர்களைத் தொடர்ந்து 13 மில்லியன் நைஜீரியர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்புகின்றனர்

நன்றி :- ஒன் இந்தியா, 22-03-2013


0 comments:

Post a Comment

Kindly post a comment.