Saturday, March 23, 2013

கேரளம்-தென் தமிழகத்தில் மழை ! சென்னையில் மேக மூட்டம் !



லட்சத்தீவு கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் சனிக்கிழமையன்று (மார்ச் 23) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 கடந்த சில வாரங்களுக்கு முன்பு இலங்கை தென் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. அதன் காரணமாக  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்டடெல்டா மாவட்டங்கள் மற்றும் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

 இந்த நிலையில் கடந்த சில நாள்களாகல்க்கோடையின் தாக்கத்தால் மாநிலம் முழுவதும் அனல் காற்றுடன் கூடிய வெயில் சுட்டெரித்து வருகிறது.

சேலம், தருமபுரியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) 100 டிகிரி வெயில் பதிவானது. திருப்பத்தூர், திருச்சி, கரூரில் 99 டிகிரியும், மதுரையில் 98 டிகிரியும், கோவையில் 97 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது.

 தற்போது அரபிக்கடல் பகுதியில் லட்சத்தீவு அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தாழ்வு நிலை வலுப்பெற்றால் மாநிலம் முழுவதும் ஓரளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கலாம் என்று வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியது:

 லட்சத்தீவுக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும்.

 தென்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் சனிக்கிழமையன்று மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றார்.                                                                                        

நன்றி :- தினமணி, 23-03-2013                                                             

0 comments:

Post a Comment

Kindly post a comment.