உலகின் 29 அரசுகள் ( அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தியா, இந்தோனீசியா, இலங்கை, கனடா, கிரேக்கம், சிங்கப்பூர், சீசெல்சு, சுரினாம், சுவாசிலாந்து, சுவிற்சர்லாந்து, சுவீடன், தென்னாப்பிரிக்கா, தென்மார்க்கு, நியூசிலாந்து, நெதர்லாந்து, நோர்வே, பிரான்சி, பிரிட்டன், பிசி, பெல்சியம், மலேசியா, மியான்மர், மொறிசியசு, யேர்மனி, வத்திகான் ) தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டுப் பேணலுக்கும் தத்தம் மக்கள் வரிப்பணத்திலிருந்து நிதி ஒதுக்குவதாலும்,
தமிழ் எண்கள், கலைச் சொற்கள், எழுத்துச் சீர்மை, எழுத்துக் கூட்டல் சீர்மை, ஒருங்குறிச் சீர்மை, ஒலிபெயர்ப்புச் சீர்மை, எழுத்துப் பெயர்ப்புச் சீர்மை, தமிழ் நாட்காட்டி, இடப் பெயர்ச் சீர்மை என, கடந்த 60-70 ஆண்டுகளில் எழுந்த வளர்ச்சி நோக்கிய ஒவ்வொரு சிக்கலும் தமிழ்மொழிக்கும், தமிழருக்கும் மட்டுமே வந்த சிக்கல் அல்ல என்பதாலும், உலகில் வளர்ச்சி நோக்கிய மொழியாளரும் இனக்குழுக்களும் எதிர்கொள்ளும் சிக்கல்களே அவை என்பதாலும், அவற்றைத் தீர்க்க உலகின் பல்வேறு சூழல்கள்:இல் மேற்கொண்ட முயற்சிகள் தமிழருக்கு வழிகாட்டி என்பதாலும்,
இதயநோய்க் கலைச் சொற்களா ?
உயிர்வேதியல் பெயர்களா ?
உலகளாவிய இடப்பெயர்களா ?
தாவரவியல் பெயர்களா ?
விலங்கியல் பெயர்களா ?
வேதியல் பெயர்களா ?
வானத்தில் புதிதாகக் காணும் விண்மீன்களின் பெயர்களா ?
1919 முதல் இயங்கிவரும்,
இவ்வாறாகத் துறைதோறும், துறைதோறும் வளர்ச்சியை நோக்கிய சீர்மை, கட்டிறுக்கமாக அமைந்து வருதலையும், உலகமயமாகும் தமிழர் நிலையையும் நோக்கவேண்டும் என்பதாலும், சீன மொழியில் பெயரிடத் துறைதோறும் அனைத்துலக அமைப்புகள் உள என்பதாலும், எளிதாகக் கிடைக்கும் ஒப்பனைப் பொருளுக்குக் கூட பெயருக்குரிய அமைப்பு சீனாவில் இருப்பதாலும், சீனமொழி உச்சரிப்புச் சீர்மைக்காக 1912-1913-ல் அமைந்த ஆணையத்தைத் தொடர்ந்து நவம்பர் 23, 1918-ல் சீன அரசின் ஆணையாகச் சுயின் புகாவோ என்று இன்றுவரை வழக்கில் உள்ள சீர்மையான மன்னரின் சார் ஒலி அமைப்புத்தரமே உலகத்தரம் என்பதாலும்,
எழுத்துப்பெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்புக்கான உலகத்தரங்கள் பின் வருமாறு,
அரபி வரிவடிவ - உரோம வரிவடிவத் தரமாக ஐஏசுஓ 233:1984,
ஐயடி 233 - 2:1993
அரபி வரிவடிவ, பாரசீக வரிவடிவ - உரோம வரிவடிவத் தரமாக
ஐஎசுஓ 223 - 3:1999
ஆர்மினியன் வரிவடிவ - உரோம வரிவடிவத் தரமாக ஐஎசுஓ 9985 : 1996
இந்தியிலிருந்து உரோம வரிவடிவத் தரம் 1972-ல் திரு.சர்மா விதந்துரைத்ததை ஐ.நா.ஏற்றது.
ஈபுறு வரிவடிவ -உரோம வரிவடிவத் தரமாக ஐஎசுஓ 259 : 1984,
ஐஎசுஒ 259 : 1994
உருசிய சிரிலிக் வரிவடிவ - இலத்தீன் சார் வரிவடிவத் தரமாக ஐஎசுஓ 9
கிரேக்க வரிவடிவ - உரோம வரிவடிவத் தரமாக ஐஎசுஓ 843 : 1997,
கொரிய வரிவடிவ - உரோம வரிவடிவத் தரமாக ஐஎசுஓ வச 11941 : 1996
சோர்சிய வரிவடிவ - உரோம வரிவடிவத் தரமாக ஐஎசுஓ 9984 : 1996
தாய்லாந்து வரிவடிவ - உரோம வரிவடிவத் தரமாக ஐஎசுஒ 11940 : 1998,
ஐஎசுஓ 11940: 2 : 2006,
தேவநாகரி வரிவடிவ - உரோம வரிவடிவத் தரமாக ஐஎசுஓ 15919 : 2001
மண்டரின் - உரோம வரிவடிவ உலகத் தரமாக 1982 முதலாகப் பின்யின் ஐஎசுஓ 7098 : 1991,
யப்பானிய வரிவடிவங்களை உரோம வடிவங்களாக்க ஐஎசுஓ 3602,
உலகத் தரங்களாக அமைந்து வருவதாலும்,
அனைத்துலக அமைப்புக்களுக்கு வழிகாட்டியாக, ஐ. நா. ஆதரவு பெற்றவையாக, உலகமயமாகிய மொழிகளின் சீர்மைக்கு உதவுவதற்காக, மொழிவழி நாடுகளின் கூட்டமைப்புக்களாக,
பிரஞ்சு மொழி வழங்கும் 44 நாடுகள், பிரஞ்சு மொழி இண நாடுகளாக,
அரேபியமொழி வழங்கும் 22 நாடுகள், அராப் அமைப்பாக,
இசுப்பானியமொழி வழங்கும் 20 நாடுகள், இசுப்பானிய மொழி வழங்கு இணையமாக,
போர்த்துக்கேயமொழி வழங்கும் 11 நாடுகள், போர்த்துக்கீசிய மொழி இணைப்பாக,
சுவாகிலி மொழி வழங்கும் 5 நாடுகள் கிழக்கு ஆப்பிரிக்கக் கூட்டாக,
எனவும், பிறவும்,ஆக, தத்தம் மொழி, பண்பாடு அடையாளம் பேணல் தொடர்பாக அரசுக் கூட்டமைப்புக்களை வைத்திருப்பதும், யுனெஸ்கோ ஐ. நா. மன்றம் அவற்றுக்கு நிதி மற்றும் அமைப்பு ஆதரவு வழங்கி ஒருங்கிணைப்பதும், உலகமயமாகும் தமிழருக்கு முன்னோட்டங்கள் என்பதாலும்,
தமிழக அரசானது, இந்திய நடுவண் அரசின் மூலமாக, யுனெஸ்கோ ஐ. நா. அமைப்பு வழியாகத் தமிழ் வளர்ச்சிக்காகத் தத்தம் மக்கள் வரிப்பணத்திலிருந்து நிதி ஒதுக்கும்.
இந்தியா உள்ளிட்ட 29 நாடுகளின் கூட்டமைப்பாக உலகத் தமிழ்ச் சங்கத்தை நிறுவுமாறும்,
பிரஞ்சுமொழி வழங்கும் 44 நாடுகள், அரேபியமொழி வழங்கும் 22 நாடுகள், இசுப்பானியமொழி வழங்கும் 20 நாடுகள், போர்த்துக்கேசியமொழி வழங்கும் 11 நாடுகள்,சுவாகிலி மொழி வழங்கும் 5 நாடுகள்,
29 நாடுகள் கொண்ட கூட்டமைப்பான இந்த உலகத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி அமைக்க யுனெஸ்கோ ஐ.நா. அமைப்புக்கு விதை நிதியாகப் பத்து இலட்சம் இந்திய ரூபாய்களைத் தமிழக அரசு, இந்திய அரசு வழியாக வழங்குமாறும்,
மதுரையில் 1981-ல் உலகத் தமிழ்ச் சங்கத்திற்காக
அப்போதைய முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் ஒதுக்கிய நிலத்தை,
29 நாடுகளின் கூட்டமைப்பிடம் யுனெசுக்கோ அமைப்புவழி வழங்குமாறும்,
அந்தக் கூட்டமைப்பின் வழியாக, தமிழ் எண்கள் சீர்மை, கலைச் சொற்கள், எழுத்துச் சீர்மை, எழுத்துக் கூட்டல் சீர்மை, ஒருங்குறிச் சீர்மை, ஒலிபெயர்ப்புச் சீர்மை, எழுத்துப் பெயர்ப்புச் சீர்மை,
தமிழர் நாட்காட்டி, இடப் பெயர்ச் சீர்மை எனக் கடந்த 60-70 ஆண்டுகளில் எழுந்த வளர்ச்சி நோக்கிய ஒவ்வொரு சிக்கலுக்கும் உலகில் வளர்ச்சி நோக்கிய மொழியாளரும் இனக்குழுக்களும் பல்வேறு சூழல்களில் மேற்கொண்ட முயற்சிகளைப்போன்று உலகத் தமிழருக்கும் மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
--- மறவன்புலவு க.சச்சிதானந்தன், ஐ. நா. பேரவைப் பணியாளர்.
நன்றி :- தன்னுரிமை, ( 20-12-2012 )
ஆசிரியர்: பாவலர் மு.இராமச்சந்திரன்
மின்னஞ்சல் :- thannurimai@gmail.com
சிறப்பு மகிழ்ச்சி
ReplyDelete