Wednesday, March 27, 2013

133 அடியில் மண்பானைகளைக் கொண்டு திருவள்ளுவர் சிலை செய்து மாணவர்கள் உலக சாதனை !



http://puthiyathalaimurai.tv/students-made-133-feet-thiruvalluvar-statue-and-created-world-record


திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திருவள்ளுவருக்கு மரியாதை செய்யும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வரிசையில் மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை குறித்த செய்தியை இப்போது பார்க்கலாம். பானைகளில் வள்ளுவர் சிலை: குறள் படைத்த வள்ளுவனை, குறள் கொண்டே சிலையாக வடித்து மரியாதை சேர்த்திருக்கின்றனர்

மேட்டுபாளையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள்…ஒரு மாணவருக்கு 3 பானைகள் என 1330 குறள்களையும் 3990 பானைகளில் எழுதி அதை ஒன்றாக்கி 133 அடியில் சிலை இவர்கள் வடித்துள்ளனர்.

40 நிமிடங்களில் உருவான பிரம்மாண்டம்:

நாற்பதே நிமிடங்களில் மாணவர்கள் உருவாக்கிய வள்ளுவர் சிலையின் பிரம்மாண்டம் பார்ப்பவர்களை வியக்க வைத்தது. எலைட் உலக சாதனை நிறுவனம்,ஏசியன் ரெக்கார்ட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாணவர்களின் சாதனைகளை கண்காணித்தனர்.

திருக்குறளின் நன்னெறிகளை பரப்புவோம்: 

உலக சாதனையை தாண்டி திருக்குறளின் நன்னெறிகளை மாணவர்களுக்கு உணர்த்தவே இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

உலகப் பொதுமறைக்கு ஓர் உன்னத மரியாதையை இந்த மாணவர்கள் சேர்த்துள்ளனர்.


காணொளி : http://puthiyathalaimurai.tv/video-archive?vid=karka&pres=2013&month=jan&paging=1&video=KAR-20130117SEG2 

நன்றி :- தினமலர், 17-01-2013

காரமடை: காரமடையில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பானைகளை பயன்படுத்தி, உலகின் மிகப்பெரிய திருவள்ளுவர் சிலையை உருவாக்கி, உலக சாதனை படைத்தனர். 

கோவை மாவட்டம் காரமடையிலுள்ள தனியார் பள்ளி மைதானத்தில், 1,330 மாணவ, மாணவியர் ஒவ்வொருவரும், ஒரு திருக்குறளை மூன்று பானைகளில் எழுதி, அந்த பானைகளை வரிசையாக அடுக்கி, 133 அடி நீளத்துக்கு திருவள்ளுவர் உருவத்தை உருவாக்கினர். 

உலக சாதனைக்கான இம்முயற்சிக்கு, ஐந்து மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், காலை 9.00 மணிக்கு துவங்கி, 9.40க்குள்ளாகவே, உலகின் மிகப்பெரிய திருவள்ளுவர் உருவத்தை உருவாக்கி மாணவ, மாணவியர் அசத்தினர். 

இதை லண்டனை சேர்ந்த எலைட் உலக சாதனை நிறுவனத்தின் இந்திய கள ஆய்வாளர் லிடியா காடின், சிங்கப்பூர் ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமியின் தீர்ப்பாளர் மெக்கேல் தாமஸ், மும்பை இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி சாதனைகள் பதிவாளர் வாசுதேவன் மற்றும் சென்னை தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தீர்ப்பாளர் லட்சுமிகாந்தன் ஆகியோர் ஆய்வு செய்து சான்று வழங்கினர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.