Wednesday, March 27, 2013

எரிக்கப்பட்ட யாழ் நூலகம் என்னவாயிற்று ? என்ன செய்ய வேண்டும் நாம் ?

 1981 இல் எரிக்கப்படுமுன் இருந்த  யாழ் நூலகத்தின் தோற்றம்
புதுப்பிக்கப்பட்ட யாழ் நூலகம்
யாழ் நூலகத்தின் நுழைவாயில்

 கே. எம். செல்லப்பா என்னும் தனிமனிதரின் வீட்டில் நடத்தி வந்த நூலகம், அவரது அருமுயற்சியால், நண்ப்ர்களின் உதவியால் யாழ் நூலகமாக உருவானது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இது.

இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினர். துனக்கத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன. 

1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது 

 யாழ்ப்பாணம் மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டது. புதிய சபை பதவியேற்றபின், நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. 

இக்குழுவினர்  இந்திய நிபுணர்களின்  உதவிகளையும்  பெற்றுக்கொண்டது. இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணியும் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. திராவிடக் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை இவர் வடிவமைத்தார்.

கட்டிடத்தை இரண்டு கட்டங்களில் கட்டிமுடிக்கத் தீர்மானித்து, முதற்கட்டமாக கட்டிடத்தின் முன்பகுதிக்கான அடிக்கல் 1953 மார்ச் மாதத்தில் நாட்டப்பட்டது. கட்டிடவேலைகள் தாமதமாகவே நடைபெற்றன. 1959 இல் கட்டிடவேலைகள் முற்றாக முடிய முன்னரே, அப்போது யாழ்ப்பாண மேயராக இருந்த ஆல்பிரட் துரையப்பா நூலகத்தின் திறப்புவிழாவை நடத்தினார்.      

எல்லோராலும் பேசப்படும் வண்ணம் வளர்ந்து தனது 50-ஆம் ஆண்டை நோக்கிப் பீடு நடை போட்டுக்கொண்டிருந்த  நூலகம் மே 31 1981-இல்  எரிக்கப்பட்டுச் சாம்பலானது. 

 இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை.
-----------------------------------------------------------------------------------------------------------------
  தகவல் உதவி :- தமிழ் விக்கிபீடியா :- 
------------------------------------------------------------------------------------------------------------------------

வலைப்பதிவர்கள் ஆளுக்கொரு புத்தகத்தை யாழ் நூலகத்திற்கு அனுப்புவோம் !

அருகில் உள்ள நண்பர்கள் ஒவ்வொருவரையும் அனுப்பிடச் செய்வோம் ! !

தமிழகப் பதிப்பகங்கள் தம் பதிப்புக்களில் ஒவ்வொரு பிரதியையும்
தவறாமல் அனுப்புவிக்கட்டும் !!! 
-----------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் அனுப்புவிப்போம் !!!!

------------------------------------------------------------------------------------------------------------


Address         Indian Consulate General in Jaffna, Sri Lanka
280 Palaly Road
Jaffna
Sri Lanka

 Telephone (+94) 21-222 0504 / 5

 Telefax (+94) 21-222 0503

 E-mail cg.jaffna@mea.gov.in
cons.jaffna@mea.gov.in

 Website

 Office Hours

 Head of Mission V. Mahalingam, Consul General
---------------------------------------------------------------------------------------------------------------

3 comments:

 1. send one book each தமிழகப் பதிப்பகங்கள் தம் பதிப்புக்களில் ஒவ்வொரு பிரதியையும்
  தவறாமல் அனுப்புவிக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பர் அனாமதேயரே !இதை ஓர் இயக்கமாகுவதே எமது பணியாக இருக்கும். விரும்பும் நூலகத்திர்கு ஓஎ தமிழ் நூலை அனுப்புவுவது தவறனா செயல் அல்லவே ? இதுகூடச் செய்யவில்லை என்றால் நாம் தமிழரும் அல்லவே ?

   Delete
 2. கலப்பை பதிப்பக வெளியீடான அழகிய பெரியவனின் சிறுகதைத் குறடு சிறுகதைத் தொகுப்பும் ( ரூ.130/-), இராஜகுணா பதிப்பக வெளியீடான முனைவர் து.ஜானகி எழுதிய விளம்பரங்களில் மொழிப்பயன்பாடும் சமுதாயத் தாக்கமும் ( ரூ.100/- )ஆகிய இரு நூல்களும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவருக்கு, யாழ் நூலகத்திற்கு அன்பளிப்பாக அளித்திடும் வேண்டுகோள் மடலுடன் இன்று பதிவு அஞ்சலில் ரூ260/- செலவில் சென்னையிலிருந்து அனுப்பியுள்ளோம் என்பதை மகிழ்வுடன் பதிவு செய்கிறோம். சாதாரண அஞ்சலில் அனுப்பினால் செலவு மிகவும் குறைவு.

  ReplyDelete

Kindly post a comment.