Thursday, February 14, 2013

”காந்தி கணக்கு” -நிமோஷினி


பெரிய அளவு

நான்கு தலைச் சிங்கம்

இந்திய அரசு முத்திரையாக

நாற்று நடும் பெண்கள் வரிசை

பிரம்மாண்ட எந்திர உழுவை

மின்காந்த கோபுரத்தூண்கள்

ஐவகை நிலத்து, ஐவகைத் தொழிலும்

விரவிக் கிடக்கும் பழைய நூறு ரூபாய்த்

தாளின் பின்புறம்.

கொஞ்சம் காசு பார்க்க வேண்டுமெனில்

ஐவகைத் தொழில் ஒன்றையாவது

ஐயம் திரிபறச் செய்தலுற வேண்டும்

கொள்கை நின்றது கடந்த காசுத்தாளில்

தற்போது அரசு முத்திரை சிறிசாக்கப்பட்டு

தாளின் பின்புறம் நிலவின

ஐவகைத் தொழிலும் அகற்றப்பட்டு

காந்தியார் தலைவந்தது காசுத்தாளில்

எவருக்கு எங்ஙனம் புரிதலானதோ

தமிழக நிதி நிறுவனங்களுக்கு

புரிதலாயிற்று இங்ஙனம்

நிதி நிறுவனத்துல பணம் போட்டால்

காந்தி கணக்குல எழுதணும்மென.

 

ஆகியதும் ஆகாததும் ( கவிதைகள் )

நிமோஷினி

அன்னை  ராஜேஸ்வரி பதிப்பகம்

41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர்,

சென்னை-600 011

தொலைபேசி: 2558 2552

முதற்பதிப்பு 2007

பக்கங்கள் 144

விலை ரூ.70/-

 

0 comments:

Post a Comment

Kindly post a comment.