Thursday, February 14, 2013

பேரிழப்பிலிருந்து அம்மா கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் மீண்டு வரவேண்டும் !

 

                                     பட உதவி:- த. கண்ணன்
 
சங்கரலிங்கம்  ஜகந்நாதன் – ஒரு காந்தியப் போராளிக்கு அஞ்சலி !

தமிழகத்தின் முக்கியமான காந்தியப் போராளிகளில் ஒருவரான ஜகந்நாதன் இன்று மரணமடைந்த செய்தி படித்தேன். மனைவி கிருஷ்ணம்மாள் ஜகந்நாதனோடு இணைந்து, பல இயக்கங்களை முன்னின்று நடத்தியவர்.

ஐந்திணை விழாவின் போது கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் அம்மாவைச் சந்தித்தேன். தனியே உரையாடவும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த 88 வயதிலும், வாரத்தில் பாதியை நாகப்பட்டினத்தில் சமூகப் பணிகளுக்காகவும், மீதியை செங்கல்பட்டில் உடல்நலமற்று இருந்த ஜகந்நாதன் ஐயாவைப் பார்த்துக் கொள்ளவும் பயன்படுத்திவந்தார். அவரைச் சந்தித்த எல்லார் மீதும் அவரின் அன்பின் குளுமை பொழிந்தது.  

இறால் பண்ணைகளை முதலில் பார்த்தபோது, ஜகந்நாதன் ஐயா ‘இதற்காகவா நாங்கள் பிரிட்டிஷ் சிறைகளில் புழுத்துப்போன உணவை உண்டோம்’ என்று மீண்டும் சிறைசெல்லத் துணிந்துவிட்டதைப் பற்றிக் கூறியபோது மனம் நெகிழாதவர்களே அந்த அறையில் இருந்திருக்கமுடியாது. 

இதைத் தொடர்ந்து கண்ணன் ஆங்கிலத்தில் எழுதிய பதிவினைப்  படித்திட,

  http://tkan.wordpress.com/2012/09/24/the-warm-touch-of-great-kindness/

பிறிதொருமுறை அவரைச் சந்திக்கவிரும்பி, அலைபேசியில் பேசியபோதும், என்னை நினைவு படுத்திக்கொள்ள முடியாவிட்டாலும், அதே அன்பு மிதந்துவந்தது. ஐயாவின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு, காந்திகிராம் சென்றுவிட்டதாகக் கூறினார். ஜனவரி முடிந்தபிறகு, அவர் உடல்நிலை தேறியபின் பேசுவோம் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

இந்த அபூர்வத் தம்பதியரின் பெரும் பங்களிப்புகள் நம்மில் பலருக்கும் தெரியாமலே உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், மாணவர்களிடம் அவர்களின் கதையைப் பகிர்ந்து வருகிறேன்.

இந்தப் பேரிழப்பிலிருந்து அம்மா மீண்டு வரவேண்டும்.


 படத்தில் இருப்பவர்தான் த. கண்ணன்.  அவரது வலைப்பூவின் பெயர்



உரக்கச் சொல்வேன்   உள்ளது உள்ளபட

http://www.seer7.com/http://www.seer7.com/

என்னும் நிறுவனத்தின் மூலம்

திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு

தலைமைப் பண்புகளுக்கான பயிற்சியை

மாணாக்கர்களுக்கு அளித்து வருகின்றார்.

தினமணியில் சர்வோதயத் தலைவர் ஜெகநாதன் மறைவு, தலைவர்கள் 

இரங்கல், என்ற செய்தியைப் படித்தவுடன், முழுமையான தகவல்களைக் 

கணினியில் சில மணிநேரம் தேடியபின் கிடைத்தவற்றின் தொகுப்பு. 

நோபல் பரிசுக்கு அடுத்து உலக அளவில் போற்றப்படும் பரிசு ! 2008-ல் கிருஷ்ணம்மாள் - சங்கரலிங்கம் ஜகந்நாதன் தம்பதியருக்குக் கிடைத்தது.

http://anbuvanam.blogspot.in/2010/01/blog-post_27.html


2010-ல் அம்பேத்கர் விருது பெற்ற திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் கொஞ்சம் வித்தியாசமானவர்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யன் கோட்டை கிராமத்தில் வசித்து வந்த ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த திரு. ராமசாமி- திருமதி நாகம்மாள் தம்பதியிருக்கு ஐந்தாவது குழந்தையாக 12.06.1926-ல் பிறந்தார். இவருக்கு
சங்கரலிங்கம். ஜெகந்நாதன் அவர்களுடன் 6.7.1950-ல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியர் இருவரும் மக்கள் சேவையே மகசேனுக்கு செய்யும் தொண்டு என்பதற்கேற்ப கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்புரிந்து வருகிறார்கள்.


திருமதி. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் காந்தியடிகளைப் பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர். நாடு விடுதலைப் பெற்றபின் வினோபாஜியின் வழிகாட்டுத-ல் பூமிதான இயக்கத்தில் இணைந்து நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டவர்.

நிலச்சுவான்தார்கள் ஆதிக்கத்தில் சிக்கித் தவித்த அப்பாவி மக்களுக்காக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக அரும்பணிகளைச் செய்து வருகிறார். 13,000 ஏக்கர் நிலங்களைப் பல போராட்டங்களினாலும், அரசின் உதவியாலும் பெற்று ஏழை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களுக்கு அளித்துள்ளார். அதிலும் மகளிர் பெயரிலேயே இந்நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லாப்டி இயக்கத்தின் மூலம் கிராமப் பொருளாதரம், கிராம சுயாட்சி அடையும் நோக்கில் படித்த வேலைவாய்ப்பற்ற பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக தொழிற் பயிற்சி, பெண்களுக்குக் கறவை மாடுகள், ஏழை மாணவர்- மாணவியர் தங்கி படிக்க விடுதிகள் அமைக்கவும் உதவி வருகிறார்.

சுவாமி பிரமானந்தா விருது, ஜமன்லால் பஜாஜ் விருது, பத்மஸ்ரீ விருது, பகவான் மகாவீர் விருது, காந்தி கிராமப் பல்கலைக்கழக விருது, உலகப் பெண்கள் விருது, சிறந்த பெண்மணி விருது, இந்திரா ரத்னா விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

2006-ல் நோபல் அமைதிப் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 2006-ல் உலகின் சிறந்த 1,000 பெண்மணிகளில் ஒருவராக ஸ்விட்சர்லாந்து அமைதிக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007-ல் வீரியக்காரி விருது, 2008-ல் அமெரிக்க நாட்டின் ஓபஸ் விருது, 2008-ல் ஸ்வீடன் நாட்டின் வாழ்வுரிமை விருது) மாற்று நோபல் பரிசு), 2009-ல் வாழ்நாள் சேவை விருதும் பெற்றவர்

2009-ஆம் ஆண்டிற்கான "அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றுள்ளார்.
இந்த விருது பெறும் நிகழ்ச்சியில் அவர் பேசும் போது "தமிழகத்தில் விவசாயம் செய்பவர்கள் மட்டுமே விவசாய நிலங்களை வாங்க விற்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்." என்று கேட்டுக் கொண்டு அதையே மனுவாகவும் முதல்வரிடம் அளித்தார்.

அப்படி அவர் கூறியதற்குரிய பொருளை அப்போதைய முதல்வர் அறிந்திருப்பார். அத்தகை சட்ட திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

இவர்களைப்பற்றிய கட்டுரை தமிழ் விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ளது. மேலும் பல தகவல்களையும் சேர்க்க வேண்டும். உரியவர்கள் ஆவன செய்வது கடமை.

நன்றிக்குரியோர் :- 

தமிழ் விக்கிபீடியா மற்றும்,

http://tkan.wordpress.com/2012/09/24/the-warm-touch-of-great-kindness/

urakkacholven.wordpress.com 

http://anbuvanam.blogspot.in/2010/01/blog-ost_27.html     

எல்லாம் முடிந்த பிறகு பார்த்தால் எங்கள் வீட்டு நூலகத்திலேயே இவர்களைப்ப்பற்றிய 246 பக்கங்கள் கொண்ட புத்தகம் இருப்பது தெரியவந்தது.                                       

0 comments:

Post a Comment

Kindly post a comment.