Wednesday, February 13, 2013

ஆசிட் வீசப்பட்ட விநோதினி சாவு !


காரைக்காலில் ஒரு தலைக்காதல் விவகாரத்தில் ஆசிட் வீசப்பட்டதில் காயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொறியியல் பட்டதாரி ஜெ. விநோதினி (23) செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

காரைக்கால் எம்.எம்.ஜி. நகரைச் சேர்ந்த ஜெயபாலன் மகள் விநோதினி. இவர் பி.டெக் படித்து முடித்து விட்டுச் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தீபாவளிப் பண்டிகைக்காகக் காரைக்காலுக்கு வந்துவிட்டு மீண்டும் சென்னைக்குச் செல்வதற்காகக் கடந்த நவம்பர் 14-ம் தேதி இரவு பஸ் நிலையத்தில் பெற்றோருடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, விநோதினி மீது ஒரு தலைக்காதல் கொண்டிருந்தாகக் கூறப்படும் திருவேட்டைக்குடி பகுதியைச் சேர்ந்த அப்பு என்கிற சுரேஷ், விநோதினி மீது ஆசிட்டை வீசிவிட்டுத் தப்பியோடிவிட்டார். இதில் காயமடைந்த அவர் காரைக்கால் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த 3 மாதங்களாகச் சென்னையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாய்க்கிழமைக் காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷிடம் விசாரணை நடத்தியபோது, விநோதினியை அவர் காதலித்ததாகவும், அதற்கு விநோதினி மறுத்து வந்ததால் அந்த ஆத்திரத்தில் அவர் மீது ஆசிட்டை வீசியதாகவும்  தெரிவித்தார்.

விநோதினியின் மருத்துவச் செலவுக்குப் புதுச்சேரி அரசு ரூ.2 லட்சமும், பிரதமர் நிவாரண நிதியாக ரூ.3 லட்சமும் அவரது தந்தை  ஜெயபாலனிடம் வழங்கப்பட்டது. ( நமது வலைப்பதிவர்கள் சார்பாக, தூத்துக்குடி ந.உ.துரை அவர்கள் தலைமையில் 75,000 ரூபாய் காசோலை மூலம் வழங்கப்பட்டது. )

உயிரிழந்த விநோதினி மீது ஆசிட் வீசியவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்போது விநோதினி இறந்து விட்டதால் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளதாகவும், சென்னை மருத்துவமனையிலிருந்து பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு கூடுதலாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஏ.ஆண்டோ அல்போன்ஸ் தெரிவித்தார்.

தன் தகுதிக்குச் சற்றும் பொருந்தாத பெண்மீது கொண்ட  ஒருதலைக் 

காதலால், புத்தியில்லாமல், அந்தப் பெண்ணின் வாழ்க்கைக்கே 

சாவுமணி அடித்து, தன் உயிருக்கும் உலை வைத்துக் கொண்டு, தன் 

பெற்றோர், சுற்றம்,உற்றார், உறவினர், நட்பு, சமூகம் மனிதத்திற்கே 

அவலத்தை ஏற்படுத்திக் கொண்ட  ஆசிட் வீசிய சுரேஷ் !

 :-
நன்றி :- தினமணி, 13-0202013     

0 comments:

Post a Comment

Kindly post a comment.