லண்டன்: இங்கிலாந்தில் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து தனது
உரிமையாளரைக் காப்பாற்றிய கிளி உடல் கருகி உயிர் இழந்தது.
இங்கிலாந்து சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள லானெல்லியில் வசிப்பவர் பென் ரீஸ். 19 வயதுக்குட்டப்பட்ட அவர் ஆஸ்திரேலிய நாட்டுக் கிளி ஒன்றை வளர்த்தார். அதற்கு குக்கீ என்று பெயர் வைத்திருந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பென் தனது படுக்கையறையில் ஊதுபத்தியைப் பொருத்தி வைத்துவிட்டு குளிக்கச் சென்றுவிட்டார். அப்போது ஊதுபத்தியில் இருந்து வந்த பொறி அவரது படுக்கையில் பட்டு அது தீப்பிடித்து எரிந்தது.
இதைப் பார்த்த குக்கீ சத்தமாகக் கத்தியது. மேலும் குளியல் அறைக்குச் சென்று பென்னைப் பார்த்து கத்தியதுடன் தனது இறகுகளை ஆட்டிக்கொண்டே இருந்தது. கிளி ஏன் திடீர் என்று இப்படிக் கத்துகிறது என்று நினைத்து தனது படுக்கையறைக்கு வந்த அவர் தீ ஜுவாலைகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அங்கிருந்து சென்று தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். ஆனால் அதற்குள் குக்கீ தீயில் கருகி இறந்தது.
இந்நிலையில் தகவல் கிடைத்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இது குறித்து பென்னின் தாய் விக்கி ரீஸ் கூறுகையில், குக்கீ பென்னின் பாதுகாப்பு தேவதை. அது ஒரு ஹீரோவாக இருந்து ஹீரோவாகவே இறந்துள்ளது. அது மட்டும் கத்தாமலும், இறகுகளை அடிக்காமலும் இருந்திருந்தால் பென்னும் இந்நேரம் இறந்திருப்பான் என்றார்.
நன்றி :- ஒன் இந்தியா, 12-02-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.