Saturday, February 9, 2013

2.அறிமுகம் :- அ.முத்துலிங்கம், கனடாவில் வாழும் தமிழ்ப் படைப்பாளி !





இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

இதுவரை வெளிவந்த நூல்கள் :

     1. அக்கா - 1964
     2. திகடசக்கரம் - 1995
     3. வம்சவிருத்தி - 1996
     4. வடக்கு வீதி - 1998
     5. மகாராஜாவின் ரயில் வண்டி - 2001
     6. அ.முத்துலிங்கம் கதைகள் - 2004
     7. அங்கே இப்ப என்ன நேரம்? - 2005
     8. வியத்தலும் இலமே - 2006
     9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது - 2006
     10. பூமியின் பாதி வயது - 2007
     11. உண்மை கலந்த நாட்குறிப்புகள் - 2008
     12. அ.முத்துலிங்கம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம் - 2008
     13. Inauspicious Times - 2008
     14. அமெரிக்கக்காரி - 2009
     15. அமெரிக்க உளவாளி - 2010
     16. ஒன்றுக்கும் உதவாதவன் - 2011

தமிழ் விக்கி அ.முத்துலிங்கம் குறித்துக் கூறுவதைக் காண, செல்க !

 http://ta.wikipedia.org/s/6j3

 1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் சபையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.

  நன்றி >-tp://amuttu.net/   

 http://ta.wikipedia.org/s/6j3 


.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் ஒலி ...

 
Jul 5, 2012 – இதில் தொடர்ந்து வரும் 14 வீடியோக்களில் எழுத்தாளர் . முத்துலிங்கத்தின் சிறுகதைகள் ஒலிவடிவத்தில் இருக்கின்றன ...

0 comments:

Post a Comment

Kindly post a comment.