Friday, January 25, 2013

தேங்காய் - முழு மனித உணவு - இரா.நல்வாழ்வு, உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம்.

*  கருவிலிருந்து குழந்தை உருவாக
    10 மாதங்கள். அதுபோல்   
    பூமியிலிருந்து தேங்காய்
    உருவாகவும் 10 மாதங்கள்.

*   தென்னையும் மனிதனைப் போன்று
     100 ஆண்டுகள் வாழ்ந்து கனி தரும்.

*    நன்கு முற்றிய தேங்காய், மாதக்
     கணக்கானாலும் கெடுவதில்லை.
நீர் வற்றிக் கொப்பரைத் தேங்காய் ஆகத்தான் மாறும்.

*  மனிதன் ஒருவனால் மட்டுமே முற்றிய தேங்காயை உரித்து, உடைத்துத்          தின்ன இயலும். உரித்துக் கொடுத்தால் எல்லா உயிர்களும் தின்னும்.                     தேங்காயை விரும்பாத உயிர்களே இல்லை.                                                         

 
*  நீர், காற்று, வெப்பம், மரத்திலிருந்து
    கீழே விழும் அதிர்ச்சி எவையும்
    தாக்கி அழிக்க இயலாப் பாதுகாப்பு
    உடையது.


*  மனிதனுக்கு மூளையைக் காக்கும்
    மண்டை ஓடு போல தேங்காயும்
    வலுவான ஓட்டு கவசத்தினால்
    அமைந்துள்ளது.

*  தேங்காய் எல்லா நிலைகளிலும் உண்ணத்தக்கது.- இளநீர், இளங்காய்,
     முற்றியது என அனைத்து நிலைகளிலும், நீரும், உணவுமாக
      அமைந்துள்ளது.

*  உலகில் தூய நீர் தேங்காயின்
     இளநீரே.

*  பற்களுக்கு வேலையளித்து நன்கு
    மென்று தின்னக் கூடிய உணவு;
    பற்களைத் தூய்மையாக
    ஆக்கவல்லது.

*  வாய் முதல் மலக்குடல் வரை
     தடையில்லாமல்செல்லக்கூடியது..

*   மலச்சிக்கல்,  குடல் புழுக்களை நீக்கவல்லது.

*  ஆண்டு முழுவதும் தடையில்லாமல் கிடைக்கும் உணவு.

*   புனிதமான உணவாகக் கருதி இறைவனுக்குப் படைக்கப்படுறது.

*   ஏழை மக்களும் உண்ணவேண்டி விநாயகருக்குத் தேங்காய் விடலை
     போடும் பழக்கம் வழக்கமாக உள்ளது.

*   குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவருக்கும் பொருந்தக்கூடிய
      உணவு. ( இளநீர் முதல் முற்றிய காய் வரை எல்லாநிலைகளிலும் )

*   இவற்றையெல்லாம் நோக்கும்பொழுது தேங்காய் மனிதனுக்காகவே
      படைக்கப்பட்ட உணவு. முழுமனித உணவு தேங்காயே என்பது
      உறுதியாகிறது.

உண்பது நாளிகை
உடுப்பது ஒரு முழம்
எண்பது கோடி எண்ணி
மாய்கின்றாய் மனமே.

- ஒளவைப் பாட்டி
 மகான்களின் சுழற்சி ! மனிதர்களின் மகிழ்ச்சி ! 

 நன்றியடன் எடுத்தாளப்பட்ட நூல்,

நோயின்றி வாழமுடியாதா ?

ஆசிரியர்

இயல்நெறி அறிஞர் புலவர்

மூ.இராமகிருட்டிணன்

நிறுவனர் : உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம். 

தொகுப்பாசிரியர், மருத்துவர்,  
இரா.நல்வாழ்வு, B.N.Y.S.
உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம்.
ஆழ்வார்குறிச்சி (வழி)
திருநெல்வேலி மாவட்டம்.
627 412

204 பக். நன்கொடை ரூ.100/-.

04634-283484, 94430 43074, 93608 69867

Web: www.universelgoodlife.com 

goodlifeashram@yahoo.co.in 

நன்றி:-படங்கள்:-

தென்னை மரம் கணினியிலிருந்து.

தேங்காய், மற்றும் உடைத்த நிலையில் தேங்காய்

தமிழ் விக்கிபீடியாவிலிருந்து.

அணுகுண்டினும் கொடியது, அடுப்பங்கரையும் அளப்பரிய நஞ்சும் என்று

இடம்பெற்றுள்ள கட்டுரையைப் படித்தோர் இயற்கை உணவிற்கு மறிவிடுவர்.

ஒரு நாளில் ஒரு வேளை மட்டுமேனும் இயற்கை உணவிற்கு மாறுவோம்.


1 comments:

  1. ஐயா, "அணுகுண்டினும் கொடியது, அடுப்பங்கரையும் அளப்பரிய நஞ்சும்" என்று இடம்பெற்றுள்ள கட்டுரையை படிக்க ஆவலாக உள்ளேன். அக்கட்டுரையை நான் எங்கு படிக்கமுடியும் என்று சொல்வீர்களா. கடந்த ஆறு மாதங்களிற்கும் மேலாக அசைவ உணவிலிருந்து விடுபட்டு சைவ உணவை கடைப்பிடித்து வருகின்றேன். இனிவருங்காலங்களில் முற்றுமுழுதாக இயற்கை உணவிற்கு மாற ஆவலுண்டு. உங்கள் உதவி என்னக்கு மிகவும் பயனளிக்கும்.

    நன்றி,
    கனடாவிலிருந்து தனராஜன்.

    ReplyDelete

Kindly post a comment.