Wednesday, January 2, 2013

இன்று சூரியனுக்கு அருகில் பூமி செல்லும் நிகழ்வு !

பூமி, சூரியனுக்கு மிக அருகில் செல்லும் நிகழ்வு, புதன்கிழமை காலை நடக்கிறது.

இது குறித்து இந்தியக் கோளகச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரகுநந்தன் குமார் கூறியது:

கோள்கள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுவதால், ஒவ்வொரு கோளும், சூரியனுக்கு மிக அருகிலும், மிகத் தொலைவிலும் செல்லும் நிகழ்வுகள் நடைபெறும்.

பூமி சூரியனுக்கு மிக அருகில் செல்லும் நிகழ்வு ஜனவரியிலும், மிகத் தொலைவில் செல்லும் நிகழ்வு ஜூலை மாதத்திலும் நடைபெறும்.

புதன்கிழமை காலை 10.10 மணிக்கு சூரியனுக்கு அருகில் பூமி செல்லும். அப்போது, 14.7 கோடி கி.மீ. இடைவெளியில் சூரியனைப் பூமி கடந்து செல்லும். அதே போன்று நடப்பாண்டு ஜூலை 5ஆம் தேதி, பூமி, சூரியனில் இருந்து மிக அதிக தொலைவில் இருக்கும் நிகழ்வு நடைபெறும்.

சூரியனுக்கு மிக அருகில் பூமி சென்றபோதிலும் , தட்பவெப்ப நிலையில் மாற்றம் இருக்காது. வெப்பமோ, குளிரோ, புவியின் சாய்வச்சுக் கோணத்தைப் பொருத்தே நிகழ்கின்றன. சூரியனுக்கு அருகில் இருப்பதைப் பொருத்து அல்ல.

எனவே, சூரிய ஒளி அதிகமாகக் கிடைத்தபோதும் அதிக வெப்பமாக உணர மாட்டோம் என்றார் ரகுநந்தன்குமார்.                                                                                      
நன்றி :- தினமணி, 02-01-2013 .                                                                                       


0 comments:

Post a Comment

Kindly post a comment.