Wednesday, January 2, 2013

இணையதளத்துக்கு வயது 30. !

லண்டன் :- ஜன.1

 இணையதளச் சேவை
 தொடங்கப்பட்டு 
செவ்வாய்க்கிழமையுடன் 
30 ஆண்டுகளாகிவிட்டன.

புரட்சிகரமான மற்றும் குறைந்த செலவிலான தகவல் தொடர்பு முறையான இணையதளச் சேவை கடந்த 1983-ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கியது.

அமெரிக்க பாதுகாப்பகம்தான் இதற்கான முன்முயற்சிகளை எடுத்து, கணினிகளை இணையம் மூலம் இணைக்கும் முறையைக் கொண்டு வந்தது.

முன்னதாக
அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி
டொனால்டு டேவீசின் வடிவமைப்புக்களை
அடிப்படையாகக் கொண்டு,
அந்நாட்டின் இராணுவத் திட்டமாக
ஆர்பாநெட் நெட்வொர்க்
1960-ஆம் ஆண்டுகளின்
இறுதியில் தொடங்கப்பட்டது.

இது அமெரிக்கப் பல்கழைக்கழகங்களில் உருவாக்கப்பட்டது. பின்னர் இதுவே இணையதளமாக வடிவம் பெற்றது.

பிரிட்டன் கணினி விஞ்ஞானி டிம் பெர்னர்ஸ் லீ
தனது  கண்டுபிடிப்புக்கள் மூலம்
வேர்ல்டு வைடு வெப்
WORLD WIDE WEB
எனப்படும்
இணையதளச் சேவைக்கு
இறுதி வடிவம் கொடுத்தார்.

இப்போது, இணையதளம் மூலம் உலகின் எந்த மூலைக்கும் மிக விரைவாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடிவது குறிப்பிடத்தக்கது.                                  
நன்றி :- தினமணி , 02-01- 2013 .                                   

0 comments:

Post a Comment

Kindly post a comment.