Thursday, January 10, 2013

விருதுக்குப்பதில் ஏரியைத் தூய்மையாக்கும் தொழில்நுட்பத்தைக் கேட்கும் அருண் கிருஷ்ணமூர்த்தி !

இளமைக்காலத்திலிருந்தே ஏரி, பறவைகள் இவற்றையெல்லாம் நேசிக்கும் தன்மையுடையவர். சென்னை கீழ்க்கட்டளை ஏரியில், பறவைகல், மீன்கள், ஆமைகள் இருந்ததையும் குறிப்பிடுகின்றார். பின் அது குப்பை மேடாக மாறியதால் ஏரிகளைச் சீரமைக்கும் எண்ணம் ஏற்பட்டதாகவும் கூறுகின்றார்.

 
கூகிள் நிறுவனத்தில் வேலை பார்த்தபோதே அருண் கிருஷ்ணமூர்த்திக்கு, சென்னையில் உள்ள புஷ்கரணி ஏரிகளின் ஆக்கிரமிப்புக்களை அகற்றி, முழுவதும் தூர்வாரி, சுற்றிலும் வேலியிட்டு, நண்பர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவியோடு சீரமைத்த அனுபவமும் உண்டு.

இத்தகைய ஆர்வத்தால், கூகிள் நிறுவனத்தில் பார்த்த வேலையை இராஜினாமா செய்து விடுகின்றார் .2009-ல் INDIA ENVIRONMENT ORGANIZATION  என்ற சுற்றுச் சூழலுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தோற்றுவிக்கின்றார், தற்பொழுது இந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரம், டில்லி ஆகிய மூன்று இடங்களில் செயல்படுவதாகவும் கூறுகின்றார்.

யாரிடமும் பண உதவி பெறுவதில்லை. ஒரு தகவல் தொடர்பு நிறுவனத்தை நடத்தி அதன் வருவாயைக் கொண்டு இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதாகக் குறிப்பிடுகின்றார். 900 மாணாக்கர்கள் இவருக்குத் துணை நிற்கின்றனர். தெருக்கூத்து நடத்தி மக்களிடம் சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் கூறுகின்றார்.

டாகுமெண்டரி படங்கள் எடுத்து சர்வதேசப் போட்டிகளில் வெற்றியும் பெற்றிருக்கின்றார். ஏரிகளைச் சீரமைத்து, சுற்றுச் சூழலைப் பாதுகாத்தமைக்காக, சர்வதேச இளைஞர் சங்கமும், சுவிட்சர்லாந்தின், ”ரோலக்ஸ்” நிறுவனமும் விருது அளித்துப் பெருமைப் படுத்தியுள்ளன. 
  விருதுக்கான பணத்திற்குப்பதிலாக, கீழ்க்கட்டளை ஏரியை மறுசீரமைக்கும் தொழில்நுட்ப உதவிகளைக் கோரியுள்ளார். அந்த நிறுவனமும் அதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளது. விரைவில் பணி துவங்கும், என்கிறார், புன்னகையுடன், அருண் கிருஷ்ணமூர்த்தி.


http://www.indiaenvironment.org/who_we_are.html

Contact Us

Arun Krishnamurthy

9940203871, 9500043483, 9884737757

Mail us at: 

arunoogle@gmail.com, 

efievents@gmail.com                                                                       

 செகண்ட் ப்ரண்ட் பேஜ், தினமலர், சென்னை, பன், 09-01-2013

ற்றும் அருண் கிரஷ்ணூர்த்ியிடம் பெற்ற ொலைபேசித் ல்கள்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.