Thursday, January 10, 2013

கணினித் தமிழுக்குக் கைகொடுங்கள் !-செல்வமுரளி,

Email not displaying correctly? View it in your browser.

கணினித் தமிழுக்குக்

கை கொடுங்கள்

எங்களைப் பற்றி
விசுவல் மீடியா டெக்னாலஜிஸ் & வி எம் ரோபாடிக்ஸ் நிறுவனத்தின் வாழ்த்தும், வணக்கமும். தமிழகத்தின் கிருஷ்ணகிரியிலிருந்து எமது இரு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. சென்ற 2012 ஜனவரி 3 ஆம் தேதி தமிழகத்தில் முதன் முறையாக C Pad http://www.cpadindia.com எனும் கையடக்கக் கணினிகளை அறிமுகம் செய்து, அதன் தொடர்பிலான அனைத்துச் சேவைகளையும் வழங்கி வருகிறோம்


மின்னியல், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பல்வேறு பெரிய நிறுவனங்கள் சந்தையில் உள்ளன. எங்களுடைய அயராத உழைப்பின் காரணமாக அவற்றுக்கு ஈடு கொடுத்து பல நல்ல அம்சங்களில் முன்னின்று வருகிறோம். குறிப்பாகத் தாய்த் தமிழைக் கணினி மயமாக்கும் முயற்சியில் வெகு சிரத்தையுடன் ஈடுபட்டு வருகிறோம். பல தளங்களில் அதில் மகிழ்ச்சி கொள்ளத்தக்க வெற்றியும் கண்டுள்ளோம்.

“ஆன்டிராய்டு” அடிப்படையில் இயங்கும் கையடக்கக் கணினிகளின் ஹார்டுவேர் பாகங்களை மட்டும் சீனாவில் இருந்து தருவித்து, அவற்றுக்கான ஆன்டிராய்டு இயங்குதளங்களை எங்கள் நிறுவனம் நிறுவிக் கொள்கிறது.

“ஆன்டிராய்டு” டேப்ளேட் கணினிகளி்ல் எமது நிறுவனம் மட்டுமே முதன் முதலில் தமிழ் ஒத்திசைவை அளித்து வருகிறது. தமிழில் உள்ள சித்திரக் கதைப் புத்தகங்கள், அகராதிகள் என பல வகையான மின் புத்தகங்களை இலவசமாகவே வடிவமைத்துள்ளோம். அது மட்டுமல்ல, தமிழ் சார்ந்த பல்வேறு பயன்பாட்டுச் செயலிகளையும் (Apps)உருவாக்கி வருகிறோம். கையடக்க கணினிகளில் தமிழுக்கான முழு ஒத்திசைவும், புதிய வடிவிலான தமிழ் மென்பொருட்களையும் தடையின்றிப் புகுத்த வேண்டும். அன்னைத் தமிழை தொழில்நுட்பத்துக்கு ஏற்ப அலங்கரித்து அழகு பார்க்க வேண்டும் என்பது எமது தலையாய நோக்கம். 

எமது நிறுவனம், C Drive http://clouddrive.io என்ற பெயரில் பென் டிரைவ் தயாரித்து, அத்துடன்  200 தமிழ் மற்றும் அடிப்படை கணினி சார்ந்த மென்பொருட்களை உள்ளிணைத்து வெளியிடுகிறோம். அதன் மூலம், நாம் எங்கு சென்றாலும், நமக்குத் தேவையான மென்பொருட்களை கணினியில் நிறுவாமல் பென் டிரைவ்களில் இருந்து நேரடியாக இயக்கலாம்.

அகில அளவில் தமிழ் மற்றும் தமிழ் மென்பொருட்கள் சார்ந்த செயல்பாடுகளில்  எமது  நிறுவனத்தின் முன்னெடுப்பு உலகத்தமிழர்களிடையே சென்று சேரவேண்டும் என்பது எங்கள் அவா. தொழில்நுட்ப மலர்ச்சியைத் தரும், தமிழ் சார்ந்த பணிகளுக்கு உலகத் தமிழ்ச் சமூகம் தரும் ஆதரவு எங்களை இன்னும் உற்சாகமாக இயங்க வைக்குமென நம்புகிறோம்.

கையடக்கக் கணினிகள், இதர வன்பொருட்களை நீங்கள் வாங்கும்போது எமது நிறுவனத்தின் தயாரிப்புகளை நாடுங்கள். அதன் மூலம் எங்கள் பணிகளில் ஒத்துழைப்புத் தாருங்கள்.

கையடக்க கணினிகள் வழியாக “டெலி மெடிசின்” எனப்படும் தொலைதூர மருத்துவத்துறையில் ஈடுபடவும் எமது நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நாட்டில் பெருகி வரும் மருத்துவத் தேவையைக் கருத்தில் கொண்டும், மூப்படையும் சமூகத்தினருக்கு உதவி வழங்குவதற்காகவும் கையடக்கக் கணினிகளின் வழியே டெலி மெடிசின் திட்டப் பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.

தொழில்நுட்பம் சார்ந்த எமது நிறுவனத்தின் அத்தனை முயற்சிகளுக்கும் உங்கள் ஒத்துழைப்புத் தேவை. ஆதரவு தாருங்கள். தொழில்நுட்ப உலகில் தமிழைத் தடையின்றிப் பருகுங்கள்.  
 
நன்றி!

என்றும் அன்புடன்

செல்வமுரளி,
இயக்குநர்.
விசுவல்மீடியா டெக்னாலஜிஸ் & விஎம் ரோபாடிக்ஸ்
 
 
To unsubscribe please click here
Tamilnadu
41-D, First Floor, G.M.Complex, Commercial Street, Krishnagiri, Tamilnadu, Tamilnadu, 635001

0 comments:

Post a Comment

Kindly post a comment.