Friday, January 11, 2013

சிதிலமடைந்த திருவரங்கம் கோயில் நெற்களஞ்சியம் !

 http://dinamani.com/tamilnadu/article1106820.ece?pageToolsFontSize=130%25 << இங்கு உள்ளது  



 திருக்கோவிலூர், மார்ச் 8:    திருக்கோவிலூர் அருகே ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் நெற்களஞ்சியம் சிதிலமடைந்த நிலையில் கேட்பாரின்றிக் கிடக்கிறது.

திருக்கோவிலூரை அடுத்த ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவரங்கம் கிராமத்தில் ஆழ்வார் ஆச்சாரியர்களால் நடுநாடு என்று சொல்லப்பட்ட திவ்யஸ்தலம் உள்ளது.

பாடல் பெற்ற கோயிலாக விளங்கும் இங்கு தமிழ் இலக்கிய முறைப்படி காடும், காட்டைச் சார்ந்த இடத்தில் முழு முதற் கடவுள் கண்ணனுக்காக ஒரு தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் தென்கரையோரம் மேடான பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, ஸ்ரீவரதர் சன்னதி, நவராத்திரி மண்டபம், ஸ்ரீவேதாந்த தேசிகன் சன்னதி, விஷ்வக்சேனர் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ஊஞ்சல் மண்டபம், வாகன மண்டபம் ஆகியவற்றுடன் நெற்களஞ்சியமும் உள்ளது.

இராமர் இருக்குமிடத்தில் ஆஞ்ச நேயர் எப்போதும் வாசம் செய்வார் என்பதற்கு ஏற்றாற்போல் இக்கோயிலுக்கு கிழக்கே சிறிய திருவடி ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.

1925-ம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் ஏற்படுத்தப்பட்டு அதன்கீழ் செயல்பட்டு வரும் இக்கோயிலில் 2009-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி கிராம மக்கள் மற்றும் பக்தர்களின் ஆதரவுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருவதோடு, இங்கு தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறுகின்றன.

இக்கோயிலைக் காண வடமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இக்கோயில் உள் வளாகத்தில் நெற்களஞ்சியம் (தானியச் சேமிப்பு கிடங்கு) சிதிலமடைந்த நிலையில் கிடக்கிறது.

இதுகுறித்து இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர் வெங்கடேசனிடம் கேட்டபோது,

""சிதிலமடைந்து காணப்படும் நெற்களஞ்சியத்தை சீரமைக்க தொல்லியல்துறை தலைமை பொறியாளர் அளித்த மதிப்பீடு மற்றும் வழிகாட்டுதல் பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை மூலமாக அதற்கான பணி நடைபெற உள்ளதாக'' தெரிவித்தார்.                                                                                      

நன்றி :-தினமணி, 09-10-2010




0 comments:

Post a Comment

Kindly post a comment.