Sunday, January 27, 2013

சீனியிலிருந்து கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றிற்கு மாறினால் உடலில் பல்வேறு நோய்கள் இல்லாமற்போகும் !




கரும்பிலிருந்து பிழியப்பட்ட கரும்புச்சாற்றுடன், அமோனியம்-பை-புளூயிடு பாக்டிரீயா, பாஸ்போரிக் அமிலம், சுண்ணாம்பு நீர், சல்பர்-டை-ஆக்ஸைடு, வளி,  பாலி எலக்ரோலைட், காஸ்டிக் சோடா, சலவை சோடா, சோடியம் ஹைட்ரோ சல்பைட், ஆகிய பல்வேறு வேதிப் பொருட்கள், அமிலங்கள்  பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட்டு சீனி தயாரிக்கப்படுகின்றது. கரும்புச் சாறுடன் வினை புரிகின்ற இந்த நச்சுப் பொருட்கள் யாவும், இறுதியில் கழிவாகப் போய்விடவில்லை. சல்பர்-டை-ஆக்ஸைடு, ஆர்சனிக் என்ர பொருளும் சீனியுடன் கூடவே தங்கிவிடுகிறது. இது 6 மாதங்கள் கழித்து வெள்ளைச் சீனியை இள மஞ்சள் நிறமாக மாற்றிவிடுகின்றது. இதில்தான் மிகுந்த ஆபத்தும் நச்சுத்தன்மையும் அதிகம் உள்ளது.

சீனி நமது இரைப்பைக்குச் சென்றபிறகு அது கரைந்து சிதைந்து வளர்சிதை மாற்றத்திற்கு உட்பட்டு உடலில் தன்மயமாவதற்கு வேண்டிய வினையூக்கிகள் ஏதும் சீனியில் இல்லை. சீனீ 90 % மாவுப் பொருளாகும். ஆகவே, இரத்தத்திலும், எலும்புகளிலும், இன்னபிற உடற் பகுதிகளிலும் சேமிப்பில் இருக்கிற கால்சியம், வைட்டமின் பி, சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களை சீனி சுரண்டி எடுத்துக்கொள்கின்றது. எனவே, இரத்தத்தில் அமில, கார சமச்சீர் நிலைக் குறைவு ஏற்படுகின்றது. எனவே, சீனி இரைப்பை, மற்ரும் குடல்களில் வெள்ளச் சீனி தங்கி விடுகின்றது. இதனால் குளுடமிக் அமிலமும் மற்ரைய பி வைட்டமின்களும் அழிக்கப்பட்டு விடுகின்றது. இதனால், லேக்டிக் அமிலம் போன்ற நச்சுப் பொருட்கள் நரம்பு மண்டலத்தில் அதிகமாகிறது. இதனால் உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்படுகின்றன.

எனவே, கருப்பட்டி, வெல்லம் பயன்படுத்துவது நல்லது

மேலும் இயற்கை விளைபொருள்களின் விற்பனை பல்வேறு மகளிர் குழுக்களின் மூலம் தற்பொழுது பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வருகின்றன. அவற்றில் சர்க்கரைக்கு மாற்றாக ஸ்டீவியா எனப்படும் சீனி துளசி, சுருள்பாசி ( ஸ்பைருலினா ) போன்றவையும் கிடைக்கின்றன. அவற்றையும் பயன்படுத்தலாம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.