Monday, January 28, 2013

மதுரை மாவட்டத்தில் நன்செய் நிலங்களில் வீட்டு மனை வாங்குபவர்களுக்குச் சில அறிவுரைகளும் ஆலோசனைகளும் !

 
மதுரை மாவட்டத்தில்  சட்ட மீறுதலாக விளை  நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால்  வருங்காலங்களில், மிகவும் உணவுப் பற்றாக்குறை உள்ள மாவட்டமாக மதுரை மாவட்டம் மாறும் அபாயம் உள்ளது.. நிலத்தடி நீர் வற்றி, பொதுமக்கள் குடி தண்ணீருக்குத் திண்டாடும் நிலையும் ஏற்படும். இவை, நீர் ஆதார வல்லுநர்கள் கூறுகின்றனர்..
 
02-12-2010-ஆம் நாள் தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாடு நகர் / கிராமப்ப் புறத் திட்ட சட்டம் 1971 ( Tamilnadu Town And Country Planing Act 1971 ) பிரிவு 47-க்குத் திருத்தம் கொண்டு வந்துள்ளது, இந்தத் திருத்தச் சட்டம் 01-01-2011-ல் அமுலுக்கும் வந்துவிட்டது. 

இந்தச் சட்டப்படி, எந்தக் குடிமகனும் தனது மனையில் ( இடத்தில் ) வளர்ச்சிப் பணி செய்ய ஊராட்சி / பஞ்சாயத்துத் தலைவரிடம் அனுமதிபெற அதற்கென்று அச்சிடப்ட்ட ஆவணத்தில் உரிய தகவலுடன்  சமர்ப்பிக்கப்பட வேண்டும் அந்த ஆவணம் ஊராட்சி/ பஞ்சாயத்துத் தலைவரால் மாவட்ட  ஆட்சியாளரின் அனுமதி வேண்டிப் பரிந்துரைக்கப்பட வேண்டும். இந்த மனை நன்செய் நிலமாக இருந்தால் அனுமதி கொடுக்குமுன் மாவட்ட ஆட்சியாளர் , மண்டல உதவி இயக்குநர் மற்றும் வருவாய்த்துறை ஆய்வாளரும் கள ஆய்வு செய்யவேண்டும்.

ஆய்வறிக்கையில், மனையின் சுற்றுப்புறம், விவசாய நிலங்களின் நிலை, விவசாயத்துக்குள்ள நீர் ஆதாரங்கள், இப்போதுள்ள சாகுபடி நிலங்களின் நிலை, எத்தன வருடங்கள் சாகுபடி செய்யாது தரிசாகக் கிடக்கின்றன என்பது போன்றவற்றிற்கான விபரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், மனை வளாகங்கள் அமைக்கும்போது வாய்க்கால்களும், அதைச் சார்ந்த சிறு கால்வாய்களும் அடைபடாமல் இருக்கிறதா, சேதம் இல்லாமலும் இருக்கிறதா என்பதையும் கவனிக்கவேண்டும். நிலத்தடி நீர் வற்றாமல் இருக்க வேண்டும் என்றும், சுகாதாரப் பிரச்சினைகள், கழிவு நீர் வெளியாகும் பிரச்சினைகள் உருவாகாமல் இருக்கவேண்டும்  என்றும் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இவ்வாறு, ஆணையர் நகர் உள்ளூர் திட்ட அலுவலகம், சென்னை சுற்றறிக்கை எண், 24935/10 GR தேதி 29-12-2010 கூறுகிறது. இதுபோல் அரசாணை ( MS ) எண்  302  வீடு, நகர்ப்புறவளர்ச்சி 
( UD -4 ) தேதி 29-12-2010 கூறுகிறது.

நன்னீர் நிலங்கள் ( வயல்வெளிகள் ) வேறு உபயோகத்திற்கு மாற்ற மாவட்ட ஆட்சியாளரின் அனுமதி வேண்டும். அதாவது ஊராட்சித் தலைவர்களோ , நகராட்சித் தலைவர்களோ நன்னீர் நிலங்களை, வயல்வெளிகளை வீட்டுமனைகளாக மாற்றிட அனுமதி வழங்க முடியாது. அவ்வாறு வழங்கப்படுமானால் அது சட்டவிரோதமானது. அப்படிக் கொடுக்கப்பட்ட நிலங்களில் வீடு கட்டினால் அவை நகர் மற்றும் ஊரகத் திட்டம் 1971 பிரிவு 56-ன்படி இடித்து மாற்றப்படும் என்று சட்டம் கூறுகிறது. 

மேலும் மதுரை உயர் நீதிமன்றம் தனது ஆணையில் MP ( MD ) No. 2 Of 2010 IN  MP ( MD ) No. 12110 0F 2010-l நன்செய் நிலங்களை நன்செய் நிலங்களாகத்தான் பதிவு செய்யவேண்டும் என்றும், வீட்டு மனைகளாகப் பதிவு செய்யக்கூடாதுஇ என்றும் கூறுகிறது. ஆனால், பெரும்பாலோர் நன்செய்நிலங்களாகப் பதிவு செய்து, பின் வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்து விடுகிறார்கள். இதை மறியாத மக்களும் இடத்தை வாங்கி வீடு கட்டுகிறார்கள். இது சட்ட விரோதமான செயலாகும்.

இந்தியக் குற்றவியல் சட்டம் INDIAN PENAL CODE 1860 பிரிவு 430, 431-ன் படி யாராவது அக்கிரமமாக விவசாய நிலஙளுக்குப் போகும் தண்ணீர்க் கால்வாய்களுக்குச் சேதம் விளைவித்தாலோ, தண்ணீர்ப் போக்கைத் தடுத்தாலோ, அவர்களுக்கு 5 வருடத் தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது மேற்கூறிய இரண்டு தண்டனைகளுமோ ஒரே சமயத்தில் விதிக்கப்படலாம்.

ஆனால் , பல ஊராட்சித் தலைவர்கள் முன் தெதியிட்டு சட்ட விரோதமாக வீட்டுமன வளாகங்களுக்கு அனுமதி கொடுப்பதாகக் கூறுகிறார்கள். இது பெரும் ஊழலாகும். ஊராட்சித் தலைவர்களின் இந்த நடவடிக்கை கண்டிக்கத் தக்கதாகும். பணம் பெற்றுக்கொண்டு இப்படிச் செய்வதாகப் பேசப்படுகின்றன. இது சட்டப்படி செல்லாது. 8 பிளாட்டுகளுக்கு மேல் ஒரு மனை பிரிவில் இருந்தால் 10 விழுக்காடு இடம் பொதுப் பயன்பாட்டுக்கு என்று ஒதுக்க வேண்டும். ஆனால் 50-60 பீளாட்டுகள் உள்ள மனை பிரிவுகள் பொது இடங்களை ஒதுக்காமல் இருந்தும் அவைகளுக்கு ஊராட்சித் தலைவர்கள் அனுமதி கொடுக்கிறார்கள் என்று பேசப்படுகிறது. இந்த ஒதுக்கீடு செய்யாவிட்டால் அந்த மனைப் பிரிவிற்கு அரசு அங்கீகாரம் கிடைக்காது. அது அனுமதியற்ற மனை வளமாகும். இங்கு வீடு கட்டினால் மின்சார இணைப்பு, தண்ணீர் இணைப்பு போன்ற சேவைகள் கிடைக்காது என்பதைப் பொதுமக்கள் உணரவேண்டும்.

அரசின் விதி முறையை அறியாதவர்களும், அறிந்தவர்களும், நன்செய் நிலங்களில் வீட்டு மனைகளை வாங்கி வீடுகளையும், தொழிற்சாலைகளையும் கட்டுபவர்களுக்கும், ஆட்சேபணைக்குறிய அரசுபுறம்போக்கான நீர்ப்பிடிப்பு ( கண்மாய் ) ஊருணி ( குளம் ) தண்ணீர் வரத்துக்கால்வாய், களம் புறம்போக்குகளிலும் வீடுகள் கட்டி உள்ளவர்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும், ஊராட்சிகளில் கையூட்டுப் பெற்றுக்கொண்டு வீட்டுவரி ரசீதுகளைப் போட்டுக் கொடுக்கின்ற காரணத்தால், அந்த வீட்டு வரி ரசீதைப் பெற்றுக் கொண்டு தமிநாடு மின்சாரார வாரியத்தின் மூலம் மின் இணைப்பைக் கொடுத்து விடுகிறார்கள். 2006-க்குப் பின்பு பல வீட்டு மனைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமான இந்த அனுமதிகளைத் திரும்பப் பெறவேண்டும் என்று மதுரை மாவட்ட நிர்வாகத்தை வேண்டிக் கொள்கிறேன்.

பொது மக்கள் இந்த உண்மைகளை அறிந்து கொள்ளவேண்டும் என்றும், நன்செய் நிலங்களிலும், வயல் வெளிகளிலும், பிளாட்டு வாங்கும்போது, விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்கின்றேன்.

இவண்

அ.அழகு சேர்வை
தலைவர்

மற்றும் ஆட்சிமண்டலக்குழு உறுப்பினர்கள்
பனையூர் கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம்,

பனையூர், மதுரை-9

கைபேசி எண் 93446 25248     

ென்னை வள்ளுவர் கோட்டத்ில் ிகழ்ந்த YOUTH HEALTH MELA-ின் இறி நாளான 27--01-2013-அன்று, இயற்கை விஞ்ானி நம்மாழ்வாரின் கந்துரையாடல் நிகழ்ச்சியின்பு, மிலிரந்த ந்திரந்திவாயிகள் வங்கிய ண்டுகள் மின் ல். 

ுரைக்கு உள்ளு மாநிலம் முழுமைக்குமே பொரந்தும்.

”பொன்னு விளையிற பூமியப்பா
விவசாயத்தைப் பொறுப்பாய்க் கவனித்துச் செய்வோமப்பா
உண்மையாய் உழைக்கிற நமக்கு
எல்லா நன்மைகளும் நாடிவந்து கூடுமப்பா”  

0 comments:

Post a Comment

Kindly post a comment.