Saturday, January 26, 2013

இரகசிய இறைவன் குப்தேஸ்வர் மற்றும் அந்தமானில் ”சுண்ணாம்புக் குகைகள் “


 குப்தேஸ்வர் குகைகள் ஒரிசாவில் ஜேய்ப்பூர் அருகே உள்ளன. வட ஆந்திரா, சட்டிஸ்கர் இரண்டுக்கும்அருகே இருக்கிறது. இப்பகுதியில் காடுகள் அதிகம் உள்ளது. அக்காடுகளில் மாவோயிஸ்டுகளின்ஊடுருவல் அதிகம் உள்ளன. இப்பகுதி எங்கும் முட்கம்பி வேலி போடப்பட்டு இருக்கும்.  

குப்தேஸ்வர் அருமையான பெயர்- இரகசிய இறைவன். இங்குள்ள ஒரு குகைக்குள் இருக்கும்கல்வடிவம் சிவனாக ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக வழிபடப்பட்டு வருகிறது. பழங்காலத்தில்குப்தேஸ்வர் மிகமிக சிலரே வரக்கூடிய அடர் கானகப்பகுதியாக இருந்தது. சிவராத்திரி அன்றுமட்டும் ஓரளவு கூட்டம் இருக்கும். இன்றும் நிலைமை பெரிதும் மாறிவிடவில்லை.

சாலைஇருக்கிறது. ஆனால் அங்கே எந்த வசதிகளும் இல்லை. மாவோயிஸ்டு பிரச்சினை இருப்பதனால்அதிகம்பேர் வருவதில்லை. ஆகவே வணிகர்கள் உருவாகுவதற்கு வாய்ப்பும் இல்லை. பெரும்பாலும்பழங்குடிகள் மட்டுமே கண்ணுக்குத் தென்படுவார்கள்.

கொலாப் நதிக்கரையில் அமைந்துள்ளகுப்தேஸ்வரின் மலைகள் சுண்ணாம்புக் கற்களால் ஆனவை. பொதுவாக சுண்ணாம்புக் கற்களால்ஆன மலைகளில்தான் குகைகள் உருவாகின்றன. இங்கு ஏழெட்டுக் குகைகள் உள்ளன அதில் மூன்றுகுகைகள்தான் பெரியவை.

மலைக்குமேல்  குகைகள் உள்ளன.. குகை வாயில்வரைஅரசு அமைத்த பழைய சிமிண்ட் பாதை உள்ளது.குப்தேஸ்வரின் முதற்குகையின் வாயில் கொஞ்சம்பெரியது. முப்பதடி உயரம்  உள்ளே நுழைவாயில் ஒருவட்டமான கூடம் போன்ற அமைப்பு.  குகை உள்ளே செல்ல செல்ல பாதை குறுகியபடியே போகும். ஒரு கட்டத்தில்நன்றாகக் குனிந்துதான் செல்லவேண்டியிருக்கும்.

குகைகளுக்குள் மட்டுமே உள்ள அடர்ந்த இருளும்செவிகளைக் குத்தும் நிசப்தமும். குகையின் காற்றிலும்ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும். மேலும் உள்ளே  செல்லச்செல்லப் பல கிளைகளாகப் பிரிந்து சென்றபடியே பல வழிகள் உள்ளன. மலையின் உள்ளே நுழையும் போதுகருப்பைக்குள் நுழைகிறோம் என்ற உணர்வு ஏற்படும்.குகைகள் உள்ள வெப்பம்தான் அவற்றை உயிருள்ள ஒருதுளைவழி என்று எண்ணச் செய்கிறது.

மலையின்கீழ்நோக்கி இறங்கும் போது சுரங்கவழியின் எல்லையில்மிகச்சிறிய ஒரு பாதை காணப்படுகிறது.
குப்தேஸ்வர் மலைமேல் ஏறுவதற்கு  இருநூறு படிகள்இருக்கும். மேலே சென்றால் சாதாரணக் கோயில் போல ஒருவாசல் தென்படும். எவர்சில்வர் கம்பியால் வாசல்போடப்பட்டிருக்கும்.

சிறிய கோயில். வாயிலின்இருபக்கமும் நந்தியும், பூதகணமும் காவல் காப்பதுபோலசிலைகளும் இருக்கும் ஆனால் உள்ளே சென்றதும் அதுவும் ஒரு குகை என்று தெரியும் சிறியகுகைவழி வழியாக இறங்கி உள்ளே செல்லவேண்டும். உள்ளே சிறிய குகை அறைக்குள் சிவலிங்கம்இருக்கும்,

அமர்நாத் பனிலிங்கம் போன்று இருக்கும்,இதுமேலிருந்து சொட்டும் நீர் விழுந்து விழுந்துஅதிலுள்ள சுண்ணாம்பு உறைந்து உருவானவடிவம். இது வளர்ந்து கொண்டே இருப்பதாகஐதீகம், அது உண்மையும் கூட.குப்தேஸ்வருக்குப் பின்னால் மேலும்கீழிறங்கும் வழி உள்ளது. அதில்இறங்கிச்சென்றால் பெரியதோர் குகைவிரிகிறது. அப்படி ஒரு பெரிய குகைஅங்கிருப்பதை ஊகிக்கவே முடியாது.

பெரியசுண்ணாம்புக்கல் தூண்கள் ஆலமர அடி போல,யானைக்கால் போல நின்றிருந்தன. மலையின்வேட்டியின் மடி போல, மலைப்பசுவின் அகிடுபோல, தொங்கும் சுண்ணாம்புப்பாறைகூம்புகளும் குகைகளும். இரு கைவழிகளாகக் குகை பிரிந்து உள்ளே சென்றபடியே இருக்கும்.

இந்தக் குகையும் அரை கிலோமீட்டருக்குஅப்பால் மிக மிகக் குறுகலாக இருக்கும்.அங்கே செல்வதற்காகப் படிகளைச் செதுக்கப் பட்டிருக்கும், என்றாலும் தொழில்முறைக் குகைப்பயணிகள் மட்டுமே மேலும் செல்லமுடியும். பாதை மிகச் சறுக்கலானது. சறுக்கி விழுந்துஉருண்டால் நான்குபக்கமும் திறந்து அடி காணமுடியாத இருட்டுடன் வாய்திறந்து நின்றகுகைச்சந்துகள் எதிலாவது விழுந்து மாட்டிக்கொள்ள நேரிடும். உள்ளே நெடுந்தொலைவு சென்றால்,திரும்பி வரும் வழி மறந்துவிடும்.

                அந்தமானில் LIMESTONE CAVES -சுண்ணாம்புக் கற்குகைகள்



தோழியர்.. கே.ஜானகி குறிப்பிடுவது போன்ற சுண்ணாம்புக்கற் குகைகள் அந்தமானில் உள்ளன. காவல் நிலையத்தில் எழுத்துமூலம் விண்ணப்பித்த பின்னரே செல்ல இயலும். சிறிது தூரம் கடல் பயணம். சேறும் சகதியும் நிறைந்த நிலப்பகுதியில் பின்னர் நடைப் பயணம். 15, 12 வயதுடைய இரு சிறுவர்கள்தான் நாட்டுப் படகில் அழைத்துச் சென்றனர். பயணித்தது எனது துணைவியுடன். வேறு எவரும் இல்லை. குகைக்குள் சென்றது அமானுஷ்ய அனுபவம். டார்ச் லைட், எலுமிச்சைகளும்தான் உதவிக்கு. உடலில் நம்மையும் அறியாமல் ஏறும்  அட்டைப் பூச்சிகளை வெளியேற்றிடவே எலுமிச்சை. சுண்ணாம்புக் குகைகள் குறுகலானவை. சுவர்ப்புறங்களைப்  பார்க்கும்பொழுது திரப்படங்களில் சித்தரிக்கப்படும் தேவலோகக் காட்சிகளை நினைவூட்டும். நினைக்கும் தெய்வ உருவங்களுடன் ஒப்பிட்டுக்கொள்ளலாம்.
தனியாக இறையுருவம் எதுவும் கிடையாது.சுனாமி வந்த சில மாதங்களுக்குப்பின் சென்று வந்தது மறக்க முடியாத அனுபவம்.

நன்றி :-.Janaki., M.A.,B.Ed., M.phil.,

0 comments:

Post a Comment

Kindly post a comment.