Thursday, January 17, 2013

தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்கள் 1.33 கோடி பேரின் விவரங்கள் இணையத்தில் வெளியாகின்றன.!

தமிழகத்தில் 1.33 கோடி மாணவர்கள் பற்றிய முழுமையான விவரங்கள் இம்மாத இறுதிக்குள் இணையதளத்தில் வெளியிடப்பட இருக்கின்றன. தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகள், 5.5 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 1.33 கோடி மாணவர்களின் விவரங்களைப் பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இந்த தகவல்கள் பள்ளிக் கல்வித் துறையின் www.tnschools.gov.in என்ற புதிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் 34,871 தொடக்கப்பள்ளிகளும் 9,969 இடைநிலைப் பள்ளிகளும் 5,167 உயர்நிலைப் பள்ளிகளும் (9%), 5,660 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்யக் கூடிய சாப்ட்வேரை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் விவரங்கள் திரட்டும் பணி தொடங்கி டிசம்பர் இறுதியில் முடிவடைந்துள்ளன. சோதனை முயற்சியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளின் விவரங்கள் மட்டும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.

தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற 5 முதல் 10 ஆசிரியர்களைக் கொண்டு இந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிகள் தொடர்பான விவரங்களில் பள்ளி திறக்கப்பட்ட தேதி, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மாணவர் தொடர்பான விவரங்களில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த தேதி, அவர்களின் கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.                                
நன்றி :- ஒன் இந்தியா, 17-01-2013                               




0 comments:

Post a Comment

Kindly post a comment.