Sunday, December 30, 2012

டெல்லி பாலியல் பலாத்காரத்தில் உண்மைக் குற்றவாளி யார் ? என்ன செய்ய வேண்டும் ?

 

 1.மது போதையில் இருந்த அந்த வாலிபர்கள் கண் மூடித்தனமாக இருவரையும் தாக்கினார்கள். தலையில் அடிபட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் மயங்கி விழுந்தார்.

2. போதையற்ற நிலையில் நீதிமன்றத்தில் குற்றவாளிகள்... 

கைதான முகேஷ் சி்ங், பவன்குப்தா, வினய் சர்மா ஆகியோர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜராயினர். இதில் வினய் சர்மா என்பவர் கோர்ட்டில் கூறியதாவது: நான் செய்யக்கூடாத பயங்கரமான குற்றத்தைப் புரிந்துவிட்டேன். என்னைத் தூக்கில் போடுங்கள். அந்தப் பெண்ணுடன் வந்த மாணவரையும் நான் அடித்து உதைத்தேன். என்னைத் தூக்கில் போடுவதுதான் சரியாக இருக்கும் என்று ஆவேசமாக கூறினார்.


இளைஞர்களின் வயிற்றுக்குள் செல்லும் மதுவரக்கன் தரும் அசட்டுத் துணிச்சலில் என்ன செய்கின்றோம் என்பது தெரியாமலேயே அருவருக்கத்தக்க செயல்களை மேற்கொள்கின்றனர்.

தமிழர் பண்பாட்டைப் பேணிக்காப்பதற்காகவே செயல்படும் ஓர் மின் குழுமம், பாதிப்புக்குள்ளான பெண்ணை மருமகளாக்கிக் கொள்வதையும், மறுமணம் பற்றியும் ஆராய்ச்சியில் இறங்குகின்றது.\\]

நஷ்ட இடு வழங்குவது சரியா / தவறா என்ற பட்டிமன்றத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.

அண்மைக்காலங்களில் நிகழ்ந்திடும் பாலியல் பலாத்காரச் செயல்பாடுகள், தந்தை-மகள், சகோதர உறவுகளையும் கூட விட்டு வைக்கவில்லை.

ஆன்மீக பூமி,  பண்பாடு-கலாசாரம் காத்திடும் தேசம் என்றெல்லாம் பெருமை பேசி என்ன பயன் ?

புத்தாண்டு, பொங்கல், மத விழாக்கள், போன்றவற்றிற்கு சம்பிரதாயமாக வாழ்த்துச் செய்திகள் வழங்குவதுபோன்று, இத்தகைய நிகழ்வுகளுக்கும் போட்டிபோட்டுக்கொண்டு தலைவர்கள் ஆறுதல் செய்திகள் வழங்குகின்றனர்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தத்தம் பங்கிற்கு மனிதச் சங்கிலியையயும், மெழுகுவர்த்தி ஊர்வலத்தையும் நடத்திவிடுகின்றனர்.

மது உள்ளிட்ட சகலவிதமான போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடை செய்யாவிடில் இதுபோன்ற வன்கொடுமைகளைத் தடுக்கவே இயலாது போகும்

எல்லாச் சீர்கேடுகளையும் களைந்திட ஒரே வழி !

மது உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை இந்தியா முழுவதும் முற்றிலுமாகத் தடை செய்தல் ! !

இல்லாவிடில், இதுபோன்ற பாலியல் பலாத்காரச் செய்திகளைக் கேட்டும், படித்தும், பார்த்தும் சகித்துக் கொண்டிருக்கும் நாம் எல்லோருமே குற்றவாளிகள்தான். ! ! ! 
போதைப்பொருட்களை முற்றிலுமாகத் தடுக்கப்படுவதொன்றுதான்   

சிங்கப்பூரில் மரணித்த இந்தியச் சகோதரிக்கு நாம் செய்யும்  உண்மையான 

இறுதி அஞ்சலி.!  இல்லை என்றால் நாம் எல்லோருமே குற்றவாளிகள்தான் ! ....             .....................

0 comments:

Post a Comment

Kindly post a comment.