Monday, December 31, 2012

புதன்கிழமைதோறும் கதராடை ! கேரள அரசு அதிரடி ஆணை !




திருவனந்தபுரம்:"கேரள மாநில அரசு ஊழியர்கள், இனி, புதன் கிழமைகளில், கதர் ஆடை அணிந்து தான், அலுவலகத்துக்கு வர வேண்டும்' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது.கேரளாவில், காங்கிரஸ் தலைமையிலான, கூட்டணி ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின், உம்மன் சாண்டி, முதல்வராக உள்ளார்.இந்நிலையில், கேரள மாநில அரசு, நேற்று வெளியிட்ட அறிக்கை:

கேரள மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், அனைத்துத் துறைகளிலும், பணியாற்றும் ஊழியர்கள், புதன் கிழமைகளில், கதர் மற்றும் கைத்தறி உடைகளைத் தான், அணிந்து வர வேண்டும்.அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், இந்த உத்தரவு பொருந்தும்.

மாநிலத்தில், கதர் மற்றும் கைத்தறித் துறையை, ஊக்கப்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.முதல்வர் உம்மன் சாண்டி பரிந்துரையின்படி, கூட்டுறவுத் துறை அமைச்சர், சி.என்.பாலகிருஷ்ணன், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். புத்தாண்டு முதல், இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. இவ்வாறு, அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய இடதுசாரி ஆட்சி காலத்திலும், கேரளாவில், இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த உத்தரவு, தீவிமாக அமல்படுத்தப் படவில்லை.                                                                                                                                

நன்றி :- தினமலர், 29-12-2012                                  


1 comments:

  1. KERALA GOVERNMENT VERY WORST GOVERNMENT, THE MR.UMMANCHANDY OR KUNTHANCHANDY IS VERY BAD MAN.

    ReplyDelete

Kindly post a comment.