Monday, December 31, 2012

மார்கழியில் நெல்லையில் நவகைலாய யாத்திரை !



நவ கைலாயங்களில் முதலாவதாகத் திகழும் பாபநாசம் கோவில் கோபுரம்

நெல்லை

மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி நவகைலாய கோவில்களுக்கு நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

சிறப்பு பஸ்கள்

தமிழ் மாதமான மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்துக்கள் சிவன் கோவில்களுக்குச் செல்வது வழக்கம். குறிப்பாக நெல்லை–தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவகைலாய கோவில்களுக்குச் செல்வது வழக்கம்.

எனவே எனவே மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தினத்தையொட்டி இந்த நவ கைலாய கோவில்களுக்குச் சிறப்பு பஸ்கள் இயக்கப் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து இருந்தது. அதன்படி நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, மணத்தி (குட்டித்தோட்டம்) மற்றும் சேர்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இதற்கு பக்தர்களிடம் இருந்து ஒரு நபருக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

முன்பதிவு

வருகிற ஜனவரி  6, 13 ஆகிய நாட்களில் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்களுக்கு நெல்லை புதிய பஸ் நிலையம் மற்றும் தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

எனவே, இந்த சிறப்பு சேவை பஸ்களை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நெல்லை அரசுப் போக்குவரத்து கழக பொது மேலாளர் சு.முருகன் தெரிவித்தார்.

தகவல் உதவி :- தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.